ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நங்காய் பள்ளத்தாக்கு பகுதியில் மெகா நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற மெகா நிலநடுக்கம் ஏற்பட்டால், அது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும் என்றும் சுனாமி நிலைமை எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிலநடுக்கம் ஏற்படும் என கூறமுடியாது எனவும், தற்போதுள்ள பூகோள காரணிகளினால் அவ்வாறான நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், ஜப்பானில் நில அதிர்வு செயல்பாடுகள் முன்பை விட அதிக அளவை எட்டியுள்ளதாக புவியியலாளர்கள் கூறுகின்றனர்.
அதன்படி 1946ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதியன்று மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அப்போது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.1 முதல் 8.4 ஆக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
நான்காய் அகழியில் இருந்து மெகா நிலநடுக்கம் ஷிசுவோகா மாகாணத்தில் உள்ள சுருகா விரிகுடாவிற்கும் கியுஷு தீவில் உள்ள ஹியுகா-நாடா கடலுக்கும் இடையே உள்ள டெக்டோனிக் தட்டு எல்லையில் ஏற்படலாம் என புவியியலாளர்கள் நம்புகின்றனர்.
இந்த புவிநடுக்கம் அடுத்த மூன்று தசாப்தங்களுக்குள் 70% முதல் 80% வரை நடப்பதற்கு அதிக நிகழ்தகவு இருப்பதாகவும், மெகா பூகம்பத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 8 முதல் 9 வரை ஏற்படலாம் என்றும் ஊகிக்கப்படுகின்றது .
அதன்படி, ஜப்பானிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, இது நடந்தால் சுமார் 224,000 பேர் மரணிக்கலாம் மற்றும் 2.38 மில்லியனுக்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழலாம் , மேலும் இதன் பொருளாதார சேதம் தோராயமாக 13 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கலாம் என்று அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
sri lankan tamil news today

No comments:
Post a Comment