🔴இலங்கை குழந்தைகள் தூக்கமின்மையினால் பெரிதும் பாதிப்பு - sri lankan tamil news today


இலங்கையில் சிறுவர்களிடம் தூக்கமின்மை பெரிதும் காணப்படுவதாக தரவுகளின் மூலம் அறியமுடிந்துள்ளதாக விசேட சமூக வைத்திய நிபுணர் இனோக விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் .

பிள்ளைகளின் ஹோர்மோன் வளர்ச்சிக்கு , மன அழுத்தத்தை கட்டுப்படுத்த , ஞாபக சக்திக்கு சிறப்பான தூக்கம் அத்தியாவசியம் என வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார் .

சாதாரணமாக குழந்தைகள்

1 - 3 மாதங்கள் = 14 - 17 மணி நேரம்
4 - 12 மாதங்கள் = 12 - 16 மணி நேரம்
1 - 2 வருடம் = 11 - 14 மணி நேரம்
3 - 4 வருடம் = 10 - 13 மணி நேரம்
5 வருடம் = 10 - 12 மணி நேரம்

நித்திரை கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது . எனவே குழந்தைகளுக்கு அந்த அந்த வயதில் தேவையான உறக்கத்தை வழங்க பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும் என வைத்தியர் வேண்டுகொண்டுள்ளார் .


sri lankan tamil news today

No comments:

Post a Comment