🔴புகைபோடும் வாகனங்களை பிளாக்லிஸ்ட் செய்ய முடிவு


அதிக புகையை வெளியிடும் வாகனங்களை பிளாக்லிஸ்ட் இல் சேர்க்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முடிவு செய்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின்  வாகன உமிழ்வு சோதனை அறக்கட்டளை நிதியம்  தெரிவித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் இன் 070 3500 525 என்ற வாட்சப் இலக்கத்தின் ஊடாக இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என பணிப்பாளர் தசுன் கமகே தெரிவித்துள்ளார்.

மேலும், வருவாய் உரிமத்தை புதுப்பிப்பதற்கு மாத்திரம் வாகன உமிழ்வு பரிசோதனை சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டாம் என வாகன உரிமையாளர்களை கமகே வலியுறுத்தியுள்ளார்.

போலியான தந்திரோபாயங்கள் மூலம் வாகன உமிழ்வு சோதனைச் சான்றிதழைப் பெற பலர் தூண்டப்பட்டாலும், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் டிஎம்டீ அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் உள்ள வீதிகளில் உரிய சோதனைகளை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதிக புகை வெளியேற்றம் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக பராமரிப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும், இல்லையெனில், வாகனத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அவர் மேலும் விளக்கினார்.

No comments:

Post a Comment