வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமாயின், 18 வீதமாக உள்ள வெட் வரியை 20% - 21% ஆக அதிகரிக்க நேரிடும் என திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இதுபோன்ற கோரிக்கையை நிறைவேற்றும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார் .
அரச சேவை தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இவ்வருடம் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது எனவும்,
அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவையாளர்களின் சம்பளம் தொடர்பில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார்.
sri lankan tamil news today

No comments:
Post a Comment