🔴நாளை இலங்கை வருகிறார் இந்தியா வெளிவிவகார அமைச்சர் - sri lankan tamil news today


இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் டாக்டர். சுப்ரமணியம் ஜெய்சங்கர் நாளை ஜூன் 20, 2024 வியாழன் அன்று  உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார் .

இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் படி, அமைச்சர் ஜெய்சங்கர் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை  சந்திக்க உள்ளார். 

மேலும்  இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது தூதுக்குழுவினர் வெளிவிவகார அமைச்சில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

அமைச்சர் ஜெய்சங்கருடன் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் வருகை தரவுள்ளனர் .


sri lankan tamil news today

No comments:

Post a Comment