நுவரெலியா பேருந்து நிலையத்தில் கழிவறைக்குச் சென்ற இருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்,தற்போது குறித்த கழிவறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட நுவரெலியா பஸ் நிலையத்தில் பொது மலசலகூடத்திற்கு சென்ற இருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா தலைமையக பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
நேற்று 26 ஆம் திகதி பிற்பகல் நுவரெலியா பிரதேச பள்ளி வீதியில் வசிக்கும் 71 வயதான மொஹமட் இம்தியாஸ் பசல் ஷெராப் என்பவர் கழிவறைக்கு சென்ற நிலையில் , குறித்த நபர் மலசலகூடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் ,
ஆரியபுர பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய அஜித் நிஷங்க என்பவர் 27ம் திகதி காலை 8 மணியளவில் மலசலகூடத்திற்குச் சென்ற போது உயிரிழந்துள்ளதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.
மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரியின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார். விசாரணை நடத்தப்படும் வரை கழிவறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது .
கழிவறையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், அது தொடர்பில் விசாரணைகளின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தலைமை பொலிஸ் பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் நுவரெலியா மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் கித்சிறி ஹேரத்திடம் கேட்டபோது, ஆண்களுக்கான கழிவறைக்கு ஒதுக்கப்பட்ட மலசலகூட அமைப்பு சீல் வைக்கப்பட்ட நிலையில், பெண்கள் பிரிவிற்கு ஒதுக்கப்பட்ட பகுதி திறந்திருப்பதாக தெரிவித்தார்.
கழிவறையில் உயிரிழந்த இருவரும் நோயாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கை கிடைக்கும் வரை கழிவறை அமைப்பின் ஆண் பிரிவு மூடப்படும் எனவும் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார் .
sri lankan tamil news today

No comments:
Post a Comment