வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிரந்தர வதிவிடத்தை வழங்க ஜப்பான் முடிவு செய்துள்ளது .
இதன்படி, வெளிநாட்டு ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு பயிற்சி திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நேற்று பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இந்த திருத்தப்பட்ட புதிய சட்டம் 2027 முதல் ஜப்பானில் அமலுக்கு வரவுள்ளது .
இதன் விளைவாக, குடியேற்றக் கட்டுப்பாடு மற்றும் அகதிகளை அடையாளம் காண்பதற்கான முந்தைய அடிப்படைகள் திருத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .
மூன்று ஆண்டுகளுக்குள் ஜப்பானில் குறிப்பிட்ட திறமையான தொழிலாளர்களாக பணிபுரிய வெளிநாட்டவர்களுக்கு பயிற்சி அளிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும் .
இதில் செவிலியர் பராமரிப்பு, கட்டுமானம் மற்றும் விவசாயம் போன்ற தொழிலாளர் பற்றாக்குறை உள்ள பல துறைகளும் இதில் அடங்கும் .
தற்போதைய சட்டத்தின் படி நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வெளிநாட்டு பணியாளர்களுக்கு தமது துறையில் தொழில் வழங்குனர்களை மாற்ற அனுமதிக்கப்படுவதில்லை .
புதிய சட்டத்தின் கீழ், ஜப்பானில் நிரந்தர வதிவிட அனுமதி பெற்ற வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் பிற கொடுப்பனவுகளை வேண்டுமென்றே செலுத்தத் தவறினால் அவர்களின் நிரந்தர வதிவிடத்தையும் ரத்து செய்யலாம் என சட்டம் அமைக்கப்பட்டுள்ளது .
ஜப்பானின் வெளிநாட்டு மக்கள்தொகை 2023 இல் 34 இலட்சங்களை தாண்டியது, ஜப்பானின் உள்நாட்டு குடிமக்களின் எண்ணிக்கை பன்னிரெண்டு மில்லியன்களாகும் .
இருப்பினும், இந்த ஆண்டு, ஜப்பானிய குடிமக்களின் எண்ணிக்கை 95,000 இனால் குறைந்துள்ளது.
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட அனுமதி வழங்கும் புதிய யோசனைக்கு இதுவாகும் ஒரு காரணமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
Labels
- ஈரான் - இஸ்ரேல் (7)
- உள்நாட்டு (302)
- சுற்றுலா தளங்கள் (3)
- வரலாறு (7)
- விளையாட்டு (45)
- வெளிநாட்டு (29)
Ads
Latest Posts
{getPosts} $results={3} $label={recent} $style={2}
Main Tags
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment