🔴பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது


கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம்  விடுத்துள்ளது.


மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இடியுடன் கூடிய மழை  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இன்று காலை 8.30 முதல் பிற்பகல் 2.00 வரையான காலப்பகுதியில் நாட்டில் அதிக மழைவீழ்ச்சியாக கிரிந்திவெல பிரதேசத்தில் 152 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.


இதே காலப்பகுதியில் வரகாபொல பிரதேசத்தில் 138.5 மில்லிமீற்றர் மழையும், வட்டுபிட்டிவல பிரதேசத்தில் 122.5 மில்லிமீற்றர் மழையும், அவிசாவளை பகுதியில் 98.5 மில்லிமீற்றர் மழையும், இரத்தினபுரி பிரதேசத்தில் 96.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.








Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today , sri lankan tamil news today ,  today sri lanka news tamil

No comments:

Post a Comment