🔴இவ்வருடம் மற்றும் அடுத்த வருடம் உயர்தர பரீட்சை நடைபெறும் காலம் தொடர்பாக அமைச்சரின் அப்டேட்


கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தரப் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டு பல்கலைக்கழக அனுமதியை துரிதப்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


16 வயதில் உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு 18 வயதில் பாடசாலை கல்வியை நிறைவு செய்து , பல்கலைக்கழக அனுமதியை விரைவாக்கும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் முன்னரே உயர்தரப் படிப்பை ஆரம்பிக்கும் சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்வதாகவும்,


முன்னதாக, சாதாரண தரப் பெறுபேறுகள் வெளியான பின்னர், உயர்தரப் பாடப்பிரிவுகள் தேர்வு மற்றும் படிப்புகள் தொடங்கும் வரை சுமார் 4-5 மாதங்கள் கால விரயம் ஏற்பட்டது.

எவ்வாறாயினும், இது எதிர்காலத்தில் நடக்காது எனவும், இந்த வாரம் உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்கும் மாணவர்கள் சரியாக இரண்டு வருடங்களின் இறுதியில் உயர்தரப் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் வாய்ப்பு இருப்பதாகவும்,

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை நவம்பரிளும் 2025 ஆம் உயர்தர பரீட்சை  செப்டம்பர் மாதத்திலும் நடைபெறும் என  கல்வி அமைச்சர் பிரேம்ஜெயந்த் தெரிவித்துள்ளார் .



Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today , sri lankan tamil news today ,  today sri lanka news tamil

No comments:

Post a Comment