🔴பல்கலைக்கழக அனுமதிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கோரல்

2023/2024 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை 2024 ஜூன் 14 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.



அதன்படி, நாளை காலை 6.00 மணி முதல் www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும், விண்ணப்பங்களை கோருவதற்கான கடைசித் திகதி 2024 ஜூலை 05 எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment