தேசிய பாடசாலைகளுக்கான 2500 புதிய ஆசிரியர் நியமனங்கள் எதிர்வரும் ஜூலை 3 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரசாயனவியல் , பெளதிகவியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம், வெளிநாட்டு மொழிகள் உள்ளிட்ட பாடங்களுக்கு 2,100 புதிய ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், 2021 ஆம் ஆண்டுக்கான ஆங்கில வழி உயர் டிப்ளோமா பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 500 மேலும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார் .
இந்த நியமனங்கள் தேசிய பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினையை கணிசமான அளவு குறைக்கும் என பிரேம்ஜயந்த வலியுறுத்தினார்.
மேலும் ஆங்கில வழி ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய , ஓய்வு பெற்ற ஆங்கில வழி ஆசிரியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment