🔴ஒலிம்பிக் 2032 பதக்கங்களை வெல்லும் நோக்கில் வேலைத்திட்டம்


பிரிஸ்பேன் 2032 ஒலிம்பிக்கை இலக்காகக் கொண்டு பாடசாலை மட்ட விளையாட்டு வீரர்களின் திறன்களை விருத்தி செய்வதற்கான பொது தனியார் கூட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

2032 பிறிஸ்பேன் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் நாடாக இலங்கையை மாற்றும் நோக்கில் , கல்வி அமைச்சும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சும் தனியார் துறை மற்றும் சிவில் சமூகத்தின் ஆதரவுடன் இந்த கூட்டு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது .

மேலும், 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் திறமையான விளையாட்டு வீரர்களுடன் கணிசமான அளவு வருமானம் முன்னேற்றம் பெற  எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த இலக்குகளை அடைவதற்காக முன்மொழியப்பட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சர் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஆகியோர் இணைந்து முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.







Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today , sri lankan tamil news today ,  today sri lanka news tamil

No comments:

Post a Comment