🔴டீ20 உலகக்கிண்ணம் 2026 , இலங்கையின் நிலை என்ன ? தகுதி பெறும் அணிகள் எவை - sri lankan tamil news today


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இனால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் 20 ஓவர் உலகக் கோப்பையின் 10வது சுற்று 2026 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

இது இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் கூட்டு ஏற்பாட்டின் கீழ் நடைபெறவுள்ளதுடன், இவ்வருட உலகக் கிண்ணப் போட்டிகளைப் போன்று 20 அணிகள் இதற்காகப் போட்டியிடவுள்ளன.

இத்தொடரில் முழுப் போட்டியும் 55 போட்டிகளைக் கொண்டது.

இந்த வருட உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்பச் சுற்றுடன் இலங்கை வெளியேறிய போதிலும், போட்டியை நடத்தும் நாடு என்பதால், இந்தியாவுடன் இணைந்து குறித்த உலகக்கிண்ண தொடருக்கு நேரடியாக இலங்கை தகுதி பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே 10 அணிகள் நேரடி தகுதி வாய்ப்பைப் பெற்றுள்ளதுடன், அதில் 07 அணிகள் இவ்வருட உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் 08 சுற்றுக்குத் தகுதி பெற்றதன் காரணமாக அந்த வாய்ப்பைப் பெற்றுள்ளன.

அதன்படி, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்களாதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மேற்கிந்திய தீவு  அணிகளுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது .

மேலும், இம்மாதம் 30ஆம் திகதிக்குள் உலக டி20 தரவரிசையில் முன்னணியில் இருக்கும் மற்ற மூன்று அணிகள் நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளன.

எவ்வாறாயினும், இந்த ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகள் இம்மாதம் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதால், சுப்பர் 08 சுற்றுக்கு தகுதி பெற முடியாத போதிலும், ட்தரவரிசையில் முன்னிலையில் இருப்பதால் நியூசிலாந்து (06), பாகிஸ்தான் (07), அயர்லாந்து (11) ஆகிய அணிகளுக்கு தகுதி வாய்ப்பு கிடைத்துள்ளது .

எஞ்சிய 08 அணிகள் எதிர்வரும் பிராந்திய தகுதிச் சுற்றுகள் மூலம் தீர்மானிக்கப்படும்.

ஐரோப்பாவில் இருந்து 02 அணிகளும், கிழக்கு ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் இருந்து ஒரு அணியும், அமெரிக்காவிலிருந்து ஒரு அணியும் உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றுக்கொள்ளும் .

மேலும், ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் நடைபெறும் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெறும் 04 அணிகள் (தலா இரண்டு அணிகள் வீதம்) 2026 உலகக் கிண்ணத்திற்குத் தகுதிபெறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment