🔴10 ஓவர்களில் பங்களாதேஷ் ஐ காலி செய்தது ஆஸ்திரேலியா - sri lankan tamil news today


இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் டக்வொர்த் லூயிஸ் முறையில் அவுஸ்திரேலிய அணி 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.


இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த வங்களாதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது.


வங்களாதேச அணி சார்பில் கேப்டன் நஜ்முல் ஹுசைன் 36 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி, 11 ஓவர்கள் 2 பந்துகளை சந்தித்து 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆண்டிகுவா மைதானத்தில் மழை பெய்ய தொடங்கியதும் போட்டியை நிறுத்த நடுவர்கள் முடிவு செய்தனர்.


அப்போது களத்தில் ஆட்டமிழக்காமல்  டேவிட் வார்னர் 35 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் குவித்திருந்தார்.


மழை பெய்ததால், டக்வொர்த் லூயிஸ் கோட்பாட்டின்படி ஆஸ்திரேலியா இலகுவான வெற்றியை பதிவு செய்துள்ளனர் .


sri lankan tamil news today

No comments:

Post a Comment