10.00 - பிரேக்கிங் - ஈரான் ஜனாதிபதி ரைஸ் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு - ஈரான் அரச ஊடகம் அறிவிப்பு
8.50 மீட்பு குழுவினர் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளதாக ஈரானிய செஞ்சிலுவை அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஹெலிகாப்டர் கணிசமாக சேதமடைந்து முழுமையாக எரிந்துள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.
8.00 - ஈரான் ஜனாதிபதி ரைசியின் ஹெலிகாப்டரை மீட்புக் குழுக்கள் கண்டுபிடித்துள்ளதாக பல ஈரானிய ஊடகங்கள் ரெட் கிரசன்ட்டை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன .
ஜனாதிபதியும் அவருடன் பயணித்தவர்களும் உயிர் பிழைத்தார்களா இல்லையா என்பது குறித்த தகவலை இதுவரையில் அவர்கள் வெளியிடவில்லை
7. 00 - துருக்கிய ட்ரோன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட சந்தேகிக்கப்படும் விபத்து தளம் தப்ரிஸ் நகரத்திலிருந்து 100km (62 மைல்) தொலைவில் தவில் என்ற கிராமத்திற்கு அருகில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
மீட்புக் குழுவினர் தற்போது அப்பகுதிக்கு செல்வதற்கு முயற்சி செய்து வருகின்றனர் - அல் ஜசீரா
6.30 - துருக்கியின் அரச செய்தி நிறுவனமான அனடோலு, ஈரானுக்கு அனுப்பப்பட்டுள்ள ட்ரோன் மூலம் ஈரானிய ஜனாதிபதி ரைசியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டரின் சிதைவாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் "வெப்பத்தின் மூலத்தை" கண்டறிந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது .
5.00 - ரஷ்யா தனது மீட்பு குழு ஒன்றை அனுப்புகிறது
3.40 - ஜனாதிபதி ரைசி அவர்களுக்காக ஈரானின் பல இடங்களில் பொது மக்கள் பிரார்த்தனை .
2.00 தொடர்ந்தும் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது . இது வரையில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடம் தொடர்பாக அடையாளம் இல்லை - ஈரான் அரச ஊடகம்
1.00 - ஜனாதிபதி ரைசியின் ஹெலிகாப்டர் மலைத்தொடர் பகுதி ஒன்றில் விபத்துக்குள்ளாகி எரிவது போன்ற போலி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவல்
இரவு 10.00 - காணாமல் சென்றுள்ள ஹெலிகாப்டரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மூன்று மீட்புப் பணியாளர்கள் காணாமல் போயுள்ளனர் என்று ரெட் கிரசண்ட் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.
தேடுதல் குழுக்கள் ஹெலிகாப்டர் காணாமல் போன இடத்திற்கு அருகில் இருப்பதாக செய்தித் தொடர்பாளர் மேலும் கூறியுள்ளார் .
வானிலை கடுமையான குளிராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தேடுதல் பணி மெதுவாக இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்
ஜனாதிபதி
இப்ராஹிம் ரைசியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் அவசர க தரையிறக்கத்தை செய்ய வேண்டி
ஏற்பட்ட ஈரான் அரச ஊடகங்கள்
தெரிவிக்கின்றன.
அங்கு என்ன
நடந்தது என்பது பற்றிய விவரங்கள் இதுவரையில் தெளிவாக இல்லை
ஈரான் ஊடகங்களின்படி, கீஸ் கிளசி மற்றும் குடாபாரின் அணைகளைத் திறந்து
வைத்து விட்டு ரைசி அஜர்பைஜான் எல்லையில் இருந்து திரும்பி ஈரானின் வடமேற்கில்
உள்ள தப்ரிஸ் நகருக்குச் சென்று கொண்டு இரூக்கும் பொழுது இந்த சம்பவம்
இடம்பெற்றுள்ளது .
ஈரானின் உள்துறை
அமைச்சர் கூறுகையில், மீட்புப்
படையினர் இன்னும் அந்த இடத்தை அடைய முயற்சி செய்கிறார்கள், ஆனால் மோசமான வானிலையால் அவர்களின் முயற்சிகள்
தடைபடுகின்றன
ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின் நிருபர்
கூறுகையில், மலை மற்றும்
மரங்கள் நிறைந்த குறித்த பகுதியில் தெளிவு
வெறும் சுமார் ஐந்து மீட்டர் வரை மட்டுமே ஆகும்
ஜனாதிபதியை
ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இருக்கும் இடத்தை அவசரகால மீட்புப் பணியாளர்கள் இன்னும்
கண்டுபிடிக்கவில்லை என்று தப்ரிஸ் நகரத்தின் ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத்
அலிரெசாபேகி கூறுகிறார்.
ஈரான் ஜனாதிபதி ரைசியுடன் பயணித்த ஏனைய இரண்டு ஹெலிகாப்டர்கள் பத்திரமாக
தரையிறங்கியதாக அவர் கூறுகிறார்
மோசமான வானிலை - கடுமையான மூடுபனி மற்றும் மழை
- ஈரானின் வடமேற்கில் உள்ள இடத்திற்குச் செல்வதற்கான மீட்புக் குழுக்களின்
முயற்சிகளைத் தடுக்கிறது.
ஹெலிகாப்டரில் பயணித்தவர்களின் நிலை இன்னும்
தெரியவில்லை.
ஈரானின் அதிகாரப்பூர்வ
ஃபார்ஸ் செய்தி நிறுவனம், ஜனாதிபதி
இப்ராஹிம் ரைசிக்காக பிரார்த்தனை செய்யும் படி ஈரானியர்களுக்கு அழைப்பு
விடுத்துள்ளது.
No comments:
Post a Comment