🔴வாகன இறக்குமதி தொடர்பாக மத்திய வங்கியின் அப்டேட்


வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் படிப்படியாக தளர்த்தும் பட்சத்தில் அதற்கு முகம் கொடுக்க வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் திறன் இலங்கை மத்திய வங்கிக்கு (CBSL) இருப்பதாக  மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார் .

வாகன இறக்குமதியை படிப்படியாக தளர்த்துவது ஒரு முக்கியமான விடயம் என கலாநிதி வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார் .

வாகன இறக்குமதியை முறையாக தளர்த்துவதன் மூலம் வெளிநாட்டு கையிருப்பை தமக்கு முகாமைத்துவம் செய்து கொள்வது இயலுமான காரியம் என மத்திய வங்கி நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

வாகன இறக்குமதியை தளர்த்துவது அரசாங்கத்தின் கொள்கை முடிவு ஆகும் . சில குறிப்பிட்ட துறைகளுக்கான வாகன இறக்குமதி ஏற்கனவே  அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் .

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளை தொடர்ந்து இலங்கை வாகன இறக்குமதியை முற்றாக இடைநிறுத்தி இருந்தது .






Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today , sri lankan tamil news today ,  today sri lanka news tamil

No comments:

Post a Comment