🔴இலங்கை வருகிறார் எலன் மஸ்க்


இவ்வருடம் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள இந்த வருடம் இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  விடுத்த அழைப்பின் பிரகாரம் அது அமைந்துள்ளது.

எவ்வாறாயினும், எலோன் மஸ்க்கின் இலங்கை விஜயம் குறித்த குறிப்பிட்ட திகதிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் எலோன் மஸ்க் குழுவுடன் இணைந்து இதற்கு தேவையான நடவடிக்கைகளை நிறைவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஸ்டார் லிங்கப்சேவையை ஆரம்பிப்பதற்கான விண்ணப்பத்தை எலன் மஸ்க் அனுப்பியுள்ளதோடு, அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கிராமிய கல்வியை மேம்படுத்துவதற்கு இவ்வாறான இணைய சேவை உதவும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் .







Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

No comments:

Post a Comment