🔴பிரிட்டனின் மாஸ்டர் செஃப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை இளைஞன்


பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இவ்வருடம் பிரித்தானிய மாஸ்டர் செஃப் போட்டியில் வெற்றியீட்டியுள்ளார்.

கால்நடை மருத்துவராக பணிபுரியும் பிரின் பிரதாபன் என்ற இலங்கை இளைஞன் இவ்வாறு மகுடம் சூடியுள்ளார் . அவருக்கு பிபிசி ஒன் நீதிபதிகளான ஜோன் டோரோட் மற்றும் கிரெக் வாலஸ் ஆகியோர் மாஸ்டர்செஃப் கோப்பையை வழங்கி வெற்றியை அறிவித்தாக  வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரின் பிரதாபன் பிரிட்டனின் மிகப்பெரிய சமையல் திட்டங்களில் ஒன்றான மாஸ்டர் செஃப் இன் 20வது சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார் .


மாஸ்டர் செஃப் வரலாற்றில் இது ஒரு தனித்துவமான சாதனையாகும்.

எட்டு வார சவாலான நிகழ்வுகளுக்குப் பிறகு, 57 சமையல் கலைஞர்களை பின்தள்ளி பிரின் பிரதாபன் மாஸ்டர் செஃப் போட்டியில் வெற்றி பெற்றது இலங்கையர் செய்த மிகப்பெரிய சாதனையாகும் .

மாஸ்டர்செஃப் நீதிபதி ஜான் டோரோட் கூறுகையில், பிரின் ஒரு அசாதாரண சமையல்காரர் மற்றும் அற்புதமான திறமைசாலி என தெரிவித்துள்ளார் .

No comments:

Post a Comment