🔴ஈரானில் அடுத்தது என்ன , யார் ஜனாதிபதி ?


ஈரானில் ஜனாதிபதி ஒருவரின் மரணம் , பாராளுமன்றத்தினால் நீக்கம் மற்றும் சுகயீனம் காரணமாக கடமைகளை நிறைவேற்ற முடியாமல் செல்லும் தருணத்தில் அவர்களது அரசியலமைப்பில் நேரடியாக தீர்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன .

இவ்வாறான தருணத்தில் நாட்டின் உப ஜனாதிபதி பாராளுமன்ற தலைமைகள் மற்றும் நீதி துறையுடன் இணைந்து 50 நாட்கள் ஆட்சி செய்ய ஆணை வழங்கப்படுகிறது . மேலும் அந்த 50 நாட்களில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டு புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் .

ஈரானின் இந்த அனைத்து விவகாரங்களிலும் இறுதி முடிவு அந்நாட்டின் ஆன்மிக தலைவரின் உறுதிப்பாட்டுடன் மட்டுமே  நடக்கும்.

ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்துவிட்டதாக அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஈரானின் அடுத்த நகர்வு தேர்தல் ஒன்றை நோக்கி நகரும்.  

No comments:

Post a Comment