🔴நியூசிலாந்தில் விரைவில் இலங்கை உயர்ஸ்தானிகர் காரியாலயம்


நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் இலங்கையின் உயர்ஸ்தானிகர் காரியாலயம் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் தீர்மானத்தின் பிரகாரம் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயமொன்று நியூசிலாந்தின் வெலிங்டனில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் வெளிநாட்டு சொத்துக்கள் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி பிரதீபா சேரம் தலைமையிலான குழுவொன்று ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நியூசிலாந்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

இலங்கையை சேர்த்த பல தொழில் தொழில் புரிவோர் மற்றும் மாணவர்கள் குழு தற்போது நியூசிலாந்தில் வசித்து வருகின்றனர் .

அவர்களுக்கு வசதிகளை வழங்குவதற்காகவும் வர்த்தகம், கல்வி, விளையாட்டு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் இதன் முதன்மை நோக்கங்களாகும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.





Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

No comments:

Post a Comment