🔴நான் தயார் சஜித் அறிவிப்பு


அதிகம் எதிர்பார்க்கப்பட்டுள்ள அனுர குமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசவுக்கு இடையிலான  அரசியல் விவாதத்தை மே மாதம் 7,9,13 அல்லது 14ம் திகதிகளில்  நடந்த தாம் தயாராக உள்ளதாகவும் , அது தொடர்பாக நேற்று (22) எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார் .

நேற்று (22) பிற்பகல் சமகி ஜன பலவேகவின் பொதுச் செயலாளர் திரு.ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கு இந்த செய்தி உத்தியோகப்பூர்வமாக கடிதம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டதாக  அக்கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் விவாதத்தில் பங்குகொள்ள சமகி ஜன பலவேகாய மறுக்கும் பட்சத்தில் அது தொடர்பாக அறிவிக்கும் படியும் குறித்த கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது .

இந்த விவாத நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய பல தொலைக்காட்சி நிறுவனங்கள் வேண்டிக்கொண்டுள்ளது .

தேசிய மக்கள் சக்தியினால் வழங்கப்பட்ட திகதிகளில் சஜித் பிரேமதாசவுக்கு வேறு கடமைகள் இருப்பதாகவும் , இது தொடர்பாக இரண்டு கட்சியினரும் கலந்து ஆலோசித்து ஒரு திகதியை முடிவு செய்ய வேண்டும் எனவும் சமகி ஜன பலவேகய எம்.பி. நளின் பண்டார தெரிவித்துள்ளார் .

அப்டேட்

மே மாதம் எந்த ஒரு நாளிலும் தான் அனுர திஸாநாயக்கவுடன் விவாதத்திற்கு தயார் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் .

மேலும் தலைவர்களுக்கிடையில் விவாதத்தை ஏற்பாடு செய்வோம் , அதே போன்று கட்சியின் இரண்டு பொருளாதார வல்லுனர்கலுக்கிடையிலும் விவாதம் ஏற்பாடு செய்வோம் . இரண்டையும் மே மாதம் செய்வதற்கு நாம் தயார் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் .

இரண்டு விவாதத்திற்கும் தமது கட்சி தயார் எனவும் , வாய் பேச்சுக்களை விட சேவைகள் செய்வதும் முக்கியம் என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார் .

இந்த பொருளாதார கொள்கை தொடர்பான விவதாத்தை முன்னின்று நடந்த தாம் தயார் என இலங்கை சட்ட மாணவர் சங்கம் அறிவித்துள்ளது .







Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

No comments:

Post a Comment