🔴பிரேக்கிங் - தியதலாவ கார் ஓட்ட போட்டி விபத்தில் 5 பேர் பலி


தியத்தலாவையில் நடைபெற்று கொண்டிருந்த கார் ஓட்ட போட்டியின் போது இடம்பெற்ற கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  இந்த சம்பவத்தில் மேலும் 21 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஓட்ட போட்டியில் ஈடுபட்டிருந்த  மோட்டார் கார் ஒன்று தடம்புரண்டு அருகே இருந்த மக்கள் மீது மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்தாகவும் 21 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன .

No comments:

Post a Comment