🔴"ஹௌஸ் அரெஸ்ட் " திட்டத்தை அமுல் செய்ய யோசனை


சிவில் குற்றங்களில் ஈடுபட்டவர்களை வீட்டுக்காவலில் வைக்கும் "ஹௌஸ் அரெஸ்ட்" திட்டத்தை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த நீதி மற்றும் சிறைச்சாலை விவகார அமைச்சு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன .

இவ்வாறு வீட்டு காவலில் வைக்கப்படவுள்ள நபர்கள் ஜி.பி.எஸ் தொழிநுட்பத்தின் மூலம் அவதானிக்கப்பட உள்ளதாகவும் டெய்லி நியூஸ் தெரிவிக்கிறது .

இதற்கு தேவையான சட்டத்தை சட்ட வரைவாளர் திணைக்களம் தயாரித்து வருவதாகவும், அது நிறைவடைந்த பின்னர் பாராளுமன்றத்தில்  சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளின் கைதிகள் கொள்திரன் 13,000 ஆக உள்ள நிலையில் தற்போது சிறைச்சாலை உள்ளவர்களின் எண்ணிக்கை 33,000 ஆக உயர்ந்துள்ளதை அடுத்து அதற்கு தீர்வாக இந்த திட்டத்தை மேற்கொள்ள  நீதி மற்றும் சிறைச்சாலை விவகார அமைச்சு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment