மைதானத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரிக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட்டுகள் விற்பனை ஆகி உள்ளன , அளவை மீறி ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் திணறியதாக தெரிவிக்கப்படுகிறது .
பாட்டு நிகழ்ச்சி நடைபெற்ற மேடைக்கு முன்பாக போடப்பட்டிருந்த பொலிஸ் தடுப்புகளை பார்வையாளர்கள் உடைத்து உள்ளே வந்ததால் , அதனைக் கட்டுப்படுத்த பொலிஸார் பலத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் .
அதிக கூட்டம் மற்றும் நிகழ்ச்சில் ஏற்பட்ட தகராறுகள் காரணமாக நீண்ட நேரம் தற்காலிகமாக இசை நிகழ்ச்சியை நிறுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது .
குறித்த நிகழ்ச்சியில் பிரபல கோலிவுட் நடிகர், நடிகைகளான தமன்னா , யோகி பாபு , மிர்ச்சி சிவா , விஜய் டிவி புகழ் , டிடி , பாலா என பலரும் கலந்து கொண்டதால், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏராளமான திரையுலகப் பிரியர்கள் இவர்களை காண வந்துள்ளனர் .
சிலருக்கு டிக்கெட் கிடைக்காததாலும் அதிக விலை கொண்ட டிக்கெட்டுக்கள் காரணமாக பலர் கூரைகளிலும், மரங்களிலும் ஏறி நின்று குறித்த நிகழ்ச்சியை பார்க்க முற்பட்டுள்ளனர் .
எவ்வாறாயினும்,குறித்த இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் குறித்த உத்தியோகப்பூர்வ தகவலகள் எதுவும் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை . யாழ்ப்பாணபொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment