🔴25 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான்


இலங்கை அணியுடன் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியினர் 155 ஓட்டங்களால் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து உள்ளனர் .

முதலில் விளையாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 308 ஓட்டங்களை பெற்றது .

பதிலுக்கு விளையாட களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 153 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெடுக்களையும் இழந்து தோல்வியை சந்தித்து உள்ளது .

ஆரம்பத்தில் மிக சிறப்பாக விளையாடி வந்த ஆப்கான் அணி ஒரு கட்டத்தில் 25 ஓவர்களில் 127-1 என இருந்தது .

அதன் பின்பு விக்கெட்டுக்கள் சரிய ஆரம்பித்தன . 25 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்கள் 7 ஓவரில் அதன் பின்பு வீழ்த்தப்பட்டது. 

ஹசரங்க 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி இருந்தார் . இலங்கை 2-0 என்ற ரீதியில் தற்போது தொடரை கைப்பற்றி உள்ளது .

No comments:

Post a Comment