🔴அதிவேக நெடுஞ்சாலையில் சென்ற வருடத்தை விட ஜனவரியில் நடந்த விபத்துக்கள் அதிகம் , காரணம் வெளியானது


இலங்கையில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் சென்ற வருடம் முழுவதும் நடந்த விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் . இருப்பினும் இவ்வருடம் , வருடத்தின் முதல் 26 நாட்களில் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலைகளில் 6 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது .

வாகனங்களுக்கு இடையிலான இடைவெளியை வைத்துக்கொள்ளாமை , நெடுஞ்சாலையில் உள்ள வீதி விளக்குகள் பல இடங்களில் ஒளிராமை இந்த விபத்துக்களுக்கான பிரதான காரணங்களாக தெரிவிக்கப்படுகின்றன. 

அதிவேக நெடுஞ்சாலைகளில் போதை பொருளுக்கு அடிமையானர்கள்  வீதி விளக்குகள் மற்றும் வயர்களை களவாடுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை குற்றம் சுமத்துகிறது .





No comments:

Post a Comment