இதன் காரணமாக
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடம் பாரிய விரக்தி எழுந்தது . பல போராட்டங்கள் இலங்கை
கிரிக்கெட் சபை முன்பே இடம் பெற்றது .தொடர்ந்தும் பல சர்ச்சைகள் தொடர , பாராளுமன்றம் வரை இதன் விவாதங்கள் சென்றன .
கிரிக்கெட் என்பது இலங்கை அரசியலில் கூட
ஆட்டங்களை ஏற்படுத்தும் ஒரு துறையாகும் . இதன் காரணமாக ஜனாதிபதி மற்றும்
விளையாட்டு துறை அமைச்சருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது . இதனை தொடர்ந்து
ஜனாதிபதியினால் விளையாட்டு துறை அமைச்சர் , பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டு புதிய விளையாட்டு துறை
அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ நியமனம் செய்யப்பட்டார் .
அவரின் நியமனத்தை
தொடர்ந்து புதிய கிரிக்கெட் தெரிவுக்குழு நியமனம் செய்யப்பட்டது .
ஆஸ்திரேலியா
இந்தியாவை போன்று அண்மையில் ஓய்வு பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர்களை கொண்டு
குறித்த கிரிக்கெட் தெரிவிக்குழு அமைக்கப்பட்டது . இதன் தலைவராக உபுல் தரங்க
நியமிக்கப்பட்டார் .
தற்போது
இலங்கையின் முன்னணி வீரர்களை கொண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்து
பயிற்றுவிப்பு பொறுப்புகளிலும் அமர்த்துவது தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது . இதில்
முன்னணி வீரர்களான டில்ஷான் , ஹெராத் , குலசேகர மற்றும் அவிஷக பெர்னாண்டோ ஆகியோரின்
பெயர்கள் முணுமுணுக்கப்படுகிறது .
தற்போது இலங்கை
கிரிக்கெட் அணியின் தலைமை பொறுப்புக்களிலும் மாற்றங்கள் கொண்டு வர இருப்பதாக
செய்திகள் வெளியாகி உள்ளன .
அதன்படி ஒருநாள்
கிரிக்கெட் அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் , டெஸ்ட் அணி தலைவராக தனஞ்ய டி சில்வா மற்றும் டீ20 அணியின் தலைவராக வனிந்து ஹசரங்க நியமிக்கப்பட
உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
இந்த அனைத்து
சர்ச்சைகளுக்கும் மத்தியில் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை ஜிம்பாப்வே அணியுடன்
கிரிக்கெட் தொடர் ஒன்றில் விளையாட உள்ளது .
No comments:
Post a Comment