ஆசிய கிண்ண வெற்றியாளர்கள்

 


ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் 1984 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது . ஆரம்பத்தில் 50 ஓவர்களை கொண்ட ஒரு நாள் தொடராக குறித்த போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களாக குறித்த தொடர் நடைபெற்று வருகின்றது .

 

உலக கிரிக்கெட் தொடர்களில் உச்சத்தில் இருக்கும் சர்வதேச ஒரு நாள் உலகக்கிண்ண தொடருக்கு அடுத்தபடியாக ஆசிய கிண்ண தொடர்  அனைவராலும் பார்க்கப்படுகிறது.

 

இந்தியா பாகிஸ்தான் மற்றும் இலங்கை என நான்கு ஒருநாள் உலகிண்ண கோப்பைகளை வெற்றி கொண்டுள்ள அணிகள் இந்த ஆசிய போட்டிகளில் விளையாடுவதால் கிரிக்கெட் ரசிகர்களிடம் இத்தொடரானது மிகவும் பிரபல்யமாக பார்க்கப்படுகிறது . மேலும் இந்த தொடரில் மோதிக் கொள்ளும் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான எதிர்பார்ப்பு பல மடங்காகும் .

 

பல கண்டங்களிலும் கிரிக்கெட் விளையாட்டானது பிரபல்யமாக இருந்தாலும் ஆசிய கண்டத்துக்கு மாத்திரமே இதுவரையில் இவ்வாறான ஒரு தொடர் நடைபெற்று வருகின்றது .

 

ஆசிய தொடரானது ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் இருந்தே இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வந்தாலும் சில வருடங்களில் அவை 3 வருடங்களுக்கு ஒரு முறையாகவும் நான்கு வருடங்களுக்கு ஒரு முறையாகவும்  சில சந்தர்ப்பங்களில் நடைபெற்று வந்துள்ளது .

 

இதுவரையில் மொத்தமாக 15 ஆசிய கோப்பை போட்டி தொடர்கள் நடைபெற்றுள்ளது . அவற்றில் இந்தியா ஏழு முறையும் இலங்கை ஆறுமுறையும் பாகிஸ்தான் இரண்டு முறையும் ஆசிய கிண்ணத் தொடரை கைப்பற்றியுள்ளது . ஆசிய கிண்ண போட்டிகளில் ஆரம்பிக்கப்பட்டு இரண்டாவது சீசனிலிருந்து  இன்றுவரை குறித்த போட்டி தொடரில் விளையாடி வரும் பங்களாதேஷ் அணியானது இதுவரையில் எவ்வித ஆசிய கிண்ணங்களை கைப்பற்றும் வாய்ப்பை பெற்றுக் கொள்ளவில்லை .

 

1984 ஆம் ஆண்டு முதலாவது ஆசிய போட்டி தொடர் நடைபெற்றது . அத்தொடரில் இந்தியா பாகிஸ்தான் இலங்கை என மூன்று அணிகள் மாத்திரமே மோதிக்கொண்டன .

 

ஐசிசி யின் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டு கிரிக்கெட் இக்கு புதிய ஒரு அணியாக இலங்கை  அத்தொடரில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது . குறித்த தொடரானது ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் நடைபெற்றது . குறித்து தொடரில் இந்தியா வெற்றிக்கொள்ள இலங்கை இரண்டாம் இடத்தை பிடித்தது.

 

இரண்டாவது ஆசிய கிண்ண போட்டிகள் இலங்கையில் நடைபெற்றது . குறித்த தொடரில் புதிய அணியாக பங்களாதேஷ் இணைந்து கொண்டது . இருப்பினும் குறித்த தொடரில் இந்தியா கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்தது . இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கிரிக்கெட்டில் இருந்த முரண்பாடுகள் காரணமாக இந்த மறுப்பு தெரிவிக்கப்பட்டது . பின்பு இலங்கை பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் குறித்த தொடரில் மோதிக் கொண்டன . குறித்த தொடரில் இலங்கை அணி சாம்பியனாக மகுடம் சூடியது . இதுவே இலங்கை பெற்ற முதலாவது ஆசிய கோப்பை வெற்றியாகும் .

 

இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வந்த ஆசிய கோப்பை  தொடரானது 2020 ஆம் ஆண்டு நடைபெற இருந்த போது கொரோனா உலகை தாக்கி இருந்தது . இதன் காரணமாக  குறித்த போட்டி தொடரானது 2021 ஆம் ஆண்டுக்கு தள்ளி  வைக்கப்பட்டது.  பின்பு அக்கால பகுதியில் குறித்து தொடரை நடத்த முடியாமல் சென்றதால் 2022 ஆம் ஆண்டு குறித்த தொடரானது பிற்போடப்பட்டது .

 

குறித்து தொடரை 2022ம் ஆண்டு  நடத்தும் வாய்ப்பை இலங்கை பெற்றுக் கொண்டிருந்தது . இருப்பினும் இலங்கைக்கு பொருளாதார ரீதியாக ஏற்பட்டு இருந்த மோசமான நிலைமை , குறித்த தொடரை நடத்தும் வாய்ப்பை கேள்விக்குறியாக்கியது . இதன் காரணமாக குறித்த தொடரை ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் நடத்துவதற்கு இலங்கை , ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இணைந்து முடிவு செய்தது .

 

அதன் பின்பு குறித்த தொடரானது 2022ம் ஆண்டு ஐக்கிய அரபு இராஜியத்தில் நடைபெற்றது . குறித்து தொடரை யாதும் எதிர்பார்க்காத விதமாக இளம் அணியாக இருந்த இலங்கை பாகிஸ்தான் இந்தியா பங்களாதேஷ் என சிறப்பான நிலையிலிருந்து அணிகளை வீழ்த்தி சாம்பியன் அணியாக மகுடம் சூடியது .

 

2020ம் ஆண்டுக்கான ஆசிய தொடர் 2022ம் ஆண்டு நடைபெற்றதால் , 2022ம் ஆண்டுக்கான ஆசிய தொடர் 2023 ஆண்டு நடத்த முடிவு எடுக்கப்பட்டது .குறித்த தொடரை நடத்தும் வாய்ப்பை பாகிஸ்தான் பெற்றுக்கொண்டது . இருப்பினும் பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு பாகிஸ்தானுக்கு விளையாட செல்ல இந்தியா மறுப்பு தெரிவித்து .

 

பின்பு குறித்த தொடரை கலப்பு தொடரை கலப்பு தொடராக பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடந்த முடிவு செய்யப்பட்டது . இந்தியா கலந்து கொள்ளாத 4 போட்டிகள் பாகிஸ்தானிலும் , மிகுதியாக உள்ள அனைத்து போட்டிகளும் இலங்கை நடத்துவதாக முடிவானது .

No comments:

Post a Comment