இலங்கையின் முதல் நிறைவேற்று ஜனாதிபதி யார் ?


 

ஆண் ஒன்றைபெண்ணாக மாற்றவும் பெண் ஒன்றை ஆணாக மாற்றவும் மாத்திர முடியாமல் , மற்ற அனைத்து விடயங்களையும் மாற்ற முடியும் என கூறிய ஒரு யாப்பை உருவாக்கிய அதிகாரம் மிக்க ஜனாதிபதி ஒருவர் தொடர்பாக இன்று பார்ப்போம் . இலங்கையின் முதல் நிறைவேற்று ஜனாதிபதி யார் ? ஆம் அவர் தான்  ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தன .  அவர் 1906 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதினேழாம் திகதி கொழும்பில் பிறந்தார் .

 

இவரது தந்தை ஒரு நீதிபதி ஆவார்  . அவர்களில் மூத்த புதல்வர்  ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்தன அதாவது ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆவார் .கொழுப்பு பிஷப் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை பயின்ற ஜே.ஆர்  பின்பு இரண்டாம் நிலை கல்வியை தொடர  கொழும்பு ரோயல் கல்லூரிக்கு மாற்றப்படுகின்றார்  . அங்கு அவர் மாணவத் தலைவர் பதவியையும் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது . மேலும் ஜே.ஆர் கிரிக்கெட் ரக்பி ,பாக்சிங் மற்றும் உதைப்பந்து போன்ற பல  விளையாட்டுகளுக்கு அதிக ஆர்வம் கொண்டுவராக பாடசாலை நாட்களில் காணப்பட்டார் . ராயல் கல்லூரியில் பல அணிகளுக்கு அவர் தலைமை தாங்கி உள்ளார் . இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் ஜே.ஆர் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

 

 பின்பு சட்டக் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்த அவர் வழக்கறிஞராக தகுதி பெற்றார் . சாதாரணமாக அரசியல் பிரவேசம் இருப்பவர்கள் வழக்கறிஞராக மாறுவது தெரிந்த விடயமாகும் . அரசியல் குடும்ப பின்னணியில் இருந்து வந்த இவருக்கு வழக்கறிஞர் ஆகும் பாதை இலகுவாக இருந்தது .  அந்த வகையில் இவரும் வழக்கறிஞர் தனது பாடசாலை நாட்களில் பின்பு தொடர்ந்து இருந்தார் .

 

பின்பு இவர் இலங்கை தேசிய காங்கிரஸில் இணைந்து அங்கு பல பதவிகளில் அங்கம் வகித்திருந்தார் . இதுவே இவரின் அரசியல் பயணத்தின் முதல் அங்கமாகும் . அதன்பின் இலங்கை பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின் ஐக்கிய தேசியக் கட்சியில் தனது அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டார் . 1948 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அரசில் நிதியமைச்சர் பதவியையும் அவர் பெற்றுக் கொண்டார் . ஐந்து வருடங்கள் அப்பதவியை தொடர்ந்து அவர் அதன் பின்பு விவசாய அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்டார் . தொடர்ந்து ஐக்கிய  தேசிய கட்சியில் பயணித்த இவர்  ,  அங்கு ஒரு பிரபல அமைச்சராக வலம் வந்தார் . அதன் பின்பு ஐக்கிய  தேசிய கட்சியின் இரண்டாவது தேசிய தலைவராக்கு அவர் மாறினார் .

 

தொடர்ந்தும்  வருடங்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் தனது அரசியல்  பயணத்தை தொடர்ந்த  அவர் 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி இலங்கை சுதந்திரக் கட்சியுடன் தோல்வி அடைந்தது  அதன் பின்பு அவர் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட தொடங்கினார் .

 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் டட்லி சேனாநாயக்கவின்  மறைவின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டார்  . 1977 ஆம் ஆண்டு ஜி ஆர் ஜே வர்த்தன தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கொண்ட முதல் தேர்தலில் மிகச்சிறந்த வெற்றியை அக்காட்சி பதிவு செய்தது. அந்த வெற்றியின் பின் இலங்கை நாட்டின் பிரதமராக திரு .ஜே .ஆர் ஜேயவரத்தன பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் .

 

1978 ஆம் ஆண்டு அவர் இலங்கை யாப்பை மறுசீரமைப்பு செய்து இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட  ஜனாதிபதியாக தன்னை மாற்றிக் கொண்டார்.

 

மூடிய பொருளாதார முறைமை காரணமாக சரிவில் சென்று கொண்டிருந்த இலங்கைக்கு திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி இலங்கை தனியார் துறைக்கும் இலங்கை பொருளாதாரத்திற்கும்  சிறந்த ஒரு வியாபார முறையை அவர் ஏற்படுத்திக் கொடுத்திருந்தார் . மீண்டும் 1983 ஆம் ஆண்டு பொது மக்கள் வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் மீண்டும் இரண்டாவது முறையாக இலங்கையின்  ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் .

 

ஐக்கிய தேசிய கட்சியன் பல சுவரொட்டிகளை அக்காலத்தில் டிடு என்பவர் நிர்மாணம் செய்து கொண்டிருந்தார் . அவர் மே தின கூட்டம் ஒன்று தொடர்பாக சுவரொட்டி  ஒன்றை நிர்மாணித்து ஜனாதிபதி ஜே ஆர் இடம்  அதன் குறைபாடுகள் தொடர்பாக காண்பிப்பதற்கு ஜனாதிபதியை சந்திக்க சென்றிருந்தார் . அந்த சுவரொட்டியில் இலங்கை சோசலிச குடியரசின் மேதகு கௌரவ ஜனாதிபதி ஜே . ஆர் ஜெயவர்தன என குறிப்பிடப்பட்டிருந்தது . அப்போது   அந்த வரிகளை நீக்கிவிட்டு , மக்கள் என்னை அறிந்து இருப்பது  ஜே ஆர்  என்று ஆகும்  . எனவே ஜே ஆர் ஜெயவர்தன  மக்களுக்கு உரையாற்றுவார் என்று மாத்திரம் குறித்த சுவரொட்டியில்  குறிப்பிடும்படி ஜே.ஆர் குறித்த சுவரொட்டி நிர்மாணம் செய்தவருக்கு குறிப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளார் .  

 

ஜே .ஆர் .  புகழ் பாடி பாடல்களோ அல்லது புத்தகங்களோ இதுவரையில் எழுதப்பட்டதில்லை இருப்பினும் அவர் இலங்கைக்கு செய்த பல விடயங்கள் இன்றும் இலங்கைக்கு நன்மை அளித்து கொண்டிருக்கின்றன.

 

இன்றும் ஜே ஆர் ஜெயவர்த்தன மற்றும் ஐக்கிய  தேசிய கட்சி அரசாங்கத்துக்கு ஜப்பான் நாட்டில் பெரியதொரு மதிப்பு காணப்படுகின்றது . அது ஏனென்றால் 1951 ஆம் ஆண்டு  பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற சமாதான மாநாட்டில் ஜப்பானுக்கு விதிக்கப்பட்டிருந்த யுத்தக்கட்டுப்பாட்டுகளை நீக்கும்படி ஜனாதிபதி ஜே.ஆர் . ஜெயவர்த்தன   அங்கு ஆற்றிய உரை ஆகும் . அந்த உரையின் பின்பு ஜப்பானுக்கு உலக நாடுகள் ஆதரவு வழங்க தொடங்கியது . அதன் பின்பு ஜப்பான் வளர்ச்சியை நோக்கி சென்றது . அதன் காரணமாக அதன் நன்றி இன்றுவரை ஜப்பானுக்கு இருந்து கொண்டு வருகின்றது .

 

இலங்கை 2022 ஆம் ஆண்டு வங்குரோத்து அடைந்த பின்பும் மீண்டும் இலங்கையை கட்டி எழுப்ப , இலங்கை கடன்களை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையை முன்னிருந்து செய்தது ஜப்பான் ஆகும் . மேலும் அக்காலத்தில் தெற்காசியாவில் இருந்த மிகப்பெரிய ஒளிபரப்பு கூட்டுத்தாபனமான இலங்கை  ரூபாவாகினி ஒளிபரப்பு கூட்டுதாபனத்தை இலங்கைக்கு ஜப்பான் பரிசாக வழங்கியிருந்தது . இதுபோன்ற பல உதவிகளை ஜப்பான் அன்றிலிருந்து இன்று வரை இலங்கைக்கு செய்து கொண்டு வருகின்றது.

 

 ஜப்பானுக்காக ஆதரவாக அன்று ஜே.ஆர் ஜெயவர்த்தன  ஆற்றிய உரைக்கு மதிப்பளிக்கும் வகையில் இன்றும் ஜப்பானில் ஜே ஆரின் சிலைகள் காணப்படுகின்றன.

 

இரண்டு முறை ஜனாதிபதியாக ஆட்சி செய்த பின்பு 1989 ஆம் ஆண்டு ஜே ஆர் ஜெயவர்த்தன அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார் . 1993 ஆம் ஆண்டு ரணசங்க பிரேமதாச கொலைக்கு பின்பும் அவர் மீண்டும் அரசியலுக்கு வருவதை எண்ணவில்லை . அது இலங்கை அரசியலில் தற்போது உள்ள தலைவர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு  ஆகும் .

 

இலங்கை யாப்பை மாற்றிய இலங்கையின் முதல் நிறைவேற்று ஜனாதிபதி  1996 ஆம் ஆண்டு புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்தார் .

No comments:

Post a Comment