உலகின் முதல் பெண் பிரதம மந்திரி யார் ?




நாட்டின் நாமத்தை உலகறிய செய்வதற்கு ஒவ்வொரு தனிநபருக்கும் ஆசை இருந்தாலும் அதனை அனைவராலும் செய்து காண்பிக்க முடியாது .

 

ஆட்சி பொறுப்பில் இருந்த அரச தலைவர் ஒருவர்  அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் அவர் செய்த சேவைகள் மற்றும் அவர் தொடர்பாக இளம் சமூகம் சிறப்பாக பேசும் என்றால் அவர் தனது நாட்டுக்கு தான் ஆட்சி பொறுப்பில் இருந்த சமயம் சிறந்த ஒரு பணியாற்றியுள்ளார் என்பதை கருத்தில் கொள்ளலாம்  .

 

அதுபோன்று இலங்கை நாட்டுக்கு உலகளவில் பெருமை சேர்த்த  ஒரு தலைவி தொடர்பாக இன்று அலசி ஆராய்வோம் . ஆம் அவர்தான் இலங்கையின் முதலாவது பெண் பிரதமர் மாத்திரமன்றி, உலகின் முதல் பெண் பிரதம மந்திரி ஆன சிறிமாவோ பண்டாரநாயக்க  குமாரதூங்க ஆவார் .

 

1916 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி  ரத்தவத்த மற்றும்  குமாரி ஜோடிக்கு மூத்த புதல்வியாக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பலாங்கொடையில் பிறக்கிறார் .

 

இரத்தினபுரியில்  தனது ஆரம்பக் கல்வியை பயின்ற இவர் கொழும்பு சாந்த மகளிர் கல்லூரியில்  தனது பாடசாலை  கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்கிறார் . தனது திருமணத்திற்கு முன்பு இருந்தே சிறிமாவோ அவர்கள் சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

 

ஆங்கிலேய ஆட்சியில்  ஒரு பிரபல அரசியல்வாதியாக  இருந்த  பண்டாரநாயக்க அவர்களுக்கு சிறிமாவோ அவர்களை திருமணம் செய்து வைக்க அவர்களது பெற்றோர்கள் முடிவு செய்கின்றனர் .பண்டாரநாயக்க அவர்கள் ஒரு சிறந்த அரசியல்வாதி  மட்டுமல்லாமல் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் கல்வி கற்றவர்  .

 

பதினாறு வருடங்கள் தன்னைவிட மூத்தவரான பண்டாரநாயக்கவை , சிறிமாவோ அவர்கள் 1940 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் திகதி திருமணம் செய்து வைக்கின்றனர் .

 

திருமணமான இவர்கள் கொழும்பில் குடியேற இவர்களுக்கு சுமித்ரா மற்றும் சந்திரிகா என இரு பெண் பிள்ளைகளும் , அனுர பண்டாரநாயக்க என  ஒரு ஆண் பிள்ளையும் கிடைக்கிறது .  சிறிமாவோ அவர்கள் பண்டாரநாயக்க அவர்களுடன் இணைந்து திறப்பு விழாக்கள் , வெளிநாட்டு அரசியல் பயணங்கள், அரசு நிகழ்வுகள்  என அரசியல் சம்பந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு வந்தார் 

 

திருமணமான  முன்பும் பின்பும்  இவர் பல மகளிர் நற்பணி அமைப்புக்களில் இணைந்து  பல சமூக சேவைகளை செய்து வந்தார் . மேலும் இலங்கை பௌத்த அமைப்பு மற்றும் புற்றுநோய் அழிப்பு அமைப்பிலும் இவர் இணைந்து செயற்பட்டுள்ளார் . இதன்  காரணமாக அரசியலுக்கு வருவதற்கு முன்பே இவரை இலங்கை மக்கள் அறிந்திருந்தனர் .

 

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு உருவான முதல் அரசின் கீழ் பண்டாரநாயக்க அவர்களுக்கு சுகாதார அமைச்சு பதவி வழங்கப்பட்டது .

 

பண்டாரநாயக்க அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் பிரதான ஒரு அங்கத்தவராக இருந்து செயல்பட்டு வந்தாலும் கட்சியோடு ஏற்பட்ட சில முரண்பாடு  பிரச்சினைகள் காரணமாக  பண்டாரநாயக்க அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 1951ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகினார் . அதன் பின்பு இலங்கை சுதந்திர கட்சியை அவர் உருவாக்கி இருந்தார். இந்த முடிவுகளுக்கு  சிறிமாவோ அவர்களின் பங்கு  இருந்தது .

 

 இவர்கள் இலங்கை சுதந்திரக் கட்சியை உருவாக்கி 1952 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர் .  இந்த தேர்தலில் தனது பிறந்த இடமான கம்பஹா அத்தனகல்ல  ஆசனத்தில் தனது கணவருக்காக தீவிர அரசியல் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தார் சிறிமாவோ .

 

1952ம் ஆண்டு நடைபெற்ற  பாராளுமன்ற தேர்தலில் ஒன்பது ஆசனங்களை கைப்பற்றி பண்டாரநாயக்க  எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார் .

 

பின்பு  1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொது  தேர்தலில் பிரதமர்  வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை முதன் முறையாக  பண்டாரநாயக்க  கேட்டுக் கொண்டார் . சேர் ஜோன் கொதலாவலவுக்கு எதிராக போட்டியிட்ட பண்டாரநாயக்க , அத்தேர்தலில் வெற்றி பெற்றார் . இந்த தேர்தலிலும் சிறிமாவோ பண்டாரநாயக்க தீவிர அரசியல் செயற்பாட்டில் தனது கணவருக்காக ஈடுபட்டிருந்தார் .

 

 வெற்றி பெற்ற பண்டாரநாயக்க அவர்கள் பிரதமராக நியமிக்கப்பட்டார் . இதன் மூலம் பிரதமர் மனைவியாக சிறிமாவோ மாறினார் .

 

 மூன்று ஆண்டுகள்  மாத்திரமே ஆட்சிப் பொறுப்பில் இருந்த பண்டாரநாயக்க 1959 ஆம் ஆண்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டார் . அவரின் மரணத்தின் பின்பு இலங்கை சுதந்திரக் கட்சி வீழ்ச்சியை நோக்கிச் சென்றது . டகனயக்க பிரதமாராக நியமிக்க்கபட அவர் 5 மாதங்களில் அழுத்தம் காரணமாக பாராளுமன்றத்தை கலைத்தார் .

 

பின்பு டட்லி சேனாநாயக்க தலைமையிலான அரசு வெற்றி பெற்ற ஒரு மாதத்தில் குறித்த அரசு கவிழ்க்கப்பட்டது . மீண்டும் இரண்டாவது  முறையாக  1960 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது .

 

 பண்டாரநாயக்க அவர்களின் மனைவியான சிறிமாவோ  அவர்களுக்கு இத்தேர்தலில் பிரதமர் அமைச்சராக போட்டியிடும்படி பலத்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது . முதலில் அக்கோரிக்கையை மறுத்த அவர் பின்பு  ஏற்றுக்கொண்டார் . பல பிரச்சினைகள் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை இன்றி நடைபெற்ற குறித்த தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் வெற்றி பெற்று  பிரதமராக தெரிவானார் . இதன் மூலம் இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட  முதல் பெண் பிரதமர் மட்டுமல்லாமல் உலகின் முதல் பெண் பிரதம மந்திரியாக வரலாற்றில் இவர் பெயர் பதியப்பட்டது .


No comments:

Post a Comment