முற்று முழுதாக கடலால் சூழப்பட்ட இலங்கை தீவானது
தொன்று தொட்டு இன்று வரை வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்தின் கீழ் பலமுறை இருந்து
வந்துள்ளது. அதேபோன்று இலங்கையின் பல பிரதேசங்களை வெளிநாடுகளில் இருந்த வந்த
ஆட்சியாளர்கள் கைப்பற்றி ஆட்சி செய்து வந்தது வரலாற்றிலிருந்து தெரிய வருகிறது . அவ்வாறு தென் இந்தியாவிலிருந்து வந்து இலங்கையையின் சில பகுதிகளை கைப்பற்றி ஆட்சி
செய்த மன்னர்களின் ஒருவர் தான் எல்லாளன் . இவரே இலங்கையை ஆண்ட தமிழ் மாமன்னன் ஆக
வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றார் .
இலங்கையின் முதலாவதும் பழமையானதுமான இராஜதானி அனுராதபுர
இராஜ்ஜியம் ஆகும் . இந்த இராஜதானி பலமுறை தென்னிந்திய மன்னர்களின் ஆதிக்கத்தின்
கீழ் இருந்து வந்துள்ளது . கிறிஸ்துக்கு முன் 215 ஆம் ஆண்டு முதல் 205 ஆம் ஆண்டு வரை அனுராதபுர ராஜ்ஜியத்தை ஆட்சி செய்த அசேல
மன்னரை கொலை செய்து இரண்டாவது முறையாக அனுராதபுர இராஜதானியை தென்னிந்திய சோழ
இளவரசன் எல்லாளன் கைப்பற்றுகின்றான் .
பல தடவைகள் இலங்கையை தென்னிந்திய ஆட்சியாளர்கள்
கைப்பற்றி இருந்தாலும் , அவர்களில்
ஒருவராலும் இலங்கையின் தெற்கு பகுதியை கைப்பற்ற முடியாமல் சென்றதாக வரலாறு
குறிப்பிடுகிறது .
தமிழில் “எல்லாளன்” என்றும் சிங்களத்தில்
“எலரா” என்றும் இவர் தமிழ் சிங்கள வரலாற்று நூல்களில் இடம்பெற்றுள்ளார். இலங்கையை
நேர்மையாகவும் நீதி கொண்டதுமாக ஆட்சி செய்த சில மன்னர்களில் இவரும் ஒருவர் என
இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சம் தெரிவிக்கின்றது.
இந்தியாவிலிருந்து படை எடுத்த வந்து இலங்கையில்
ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னரை கொலை செய்து ஆட்சியை கைப்பற்றி இருந்தாலும், இவர்
ஆட்சி செய்த விதம் இவரின் தனித்துவமான குணங்கள் தொடர்பாக இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சம் இவர் தொடர்பாக இவரின் நேர்மை
தொடர்பாகவும் பல விடயங்களை குறிப்பிட்டுள்ளது.
இவரின் நேர்மை தொடர்பாக பல சம்பவங்கள்
குறிப்பிடப்பட்டாலும் நீதி தவறாமல் தனது மகனுக்கு வழங்கிய தண்டனை தொடர்பான சம்பவம்
குறித்து பல இடங்களிலும் பெரிதாக பேசப்படுகிறது.
எல்லாள மன்னரிடம் நீதி கேட்டு வருபவர்களுக்காக
தனது அரண்மனை அருகில் ஒரு ஒரு மணியை தொங்க விட்டிருந்தான். அந்த மணியை அடித்து
தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாக குறிப்பிடுபவர்களுக்கு நியாயம்
வழங்குவதற்காக அது அங்கே வைக்கப்பட்டு இருந்தது .
ஒரு நாள் குறித்த மணியை ஒரு பசு அடிக்கிறது .
அது ஏன் அந்த மணியை அடித்ததாக விசாரிக்க மன்னன் எல்லாளன் உத்தரவு விடுகின்றான் .
பின்பு எல்லாளனின் மகன் தேரில் அந்த பசுவின் குட்டி மோதி இறந்து விட்டதாகவும் மன்னரிடம் தெரிவிக்கப்படுகிறது
.
அந்தப் பசுவுக்கு நியாயம் வழங்குவதற்காக அரசனாக
இருந்தும் தனது மகனை அந்த பசு குட்டி இறந்து போனது போன்று தேர் மூலம் தனது
மகனையும் ஏற்றி கொலை செய்யும்படி உத்தரவு விடுகிறான் மன்னன் எல்லாளன் . இவ்வாறு
இவர் நீதி தவறாமல் நேர்மையாக நடந்து கொண்டமைக்காக இவர் மனு நீதி சோழன் என்று
அழைக்கப்பட்டார் .
இன்னும் ஒரு நாள் எல்லாளன் தனது தேரில்
பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது , பௌத்த மத சிலை ஒன்று அவரது தேரில் மோதி
உடைந்து விடுவதாகவும் அதனை அறிந்து கொண்ட அவர் தனக்கு மரண தண்டனை விதிக்கும்படி
உத்தரவு விடுகிறார் . இருப்பினும் பௌத்த மதம் இதனை அனுமதிக்காது என்று மன்னரின்
மந்திரிமார் அவருக்கு ஆலோசனை வழங்கி அந்த
தண்டனையை அவர்கள் தடுத்து விடுகிறார்கள்.
44 ஆண்டு காலம் இலங்கையை நீதி தவறாமல் ஆட்சி செய்த
எல்லானனின் ஆட்சியானது அனுராத புறத்தை மையமாகக் கொண்ட ரஜரட்டவில் இருந்தது . இவரின் ராஜ்ஜியம்
வடக்கில் மகாவலி கங்கை வரை நீண்டிருந்தது . இவர் தொடர்பாக இந்தியாவின் தென்னிந்திய
வரலாற்று நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது .
எல்லாளன் இலங்கையில் கைப்பற்றும் பொழுது
இலங்கையின் தெற்கில் சிறிய ஒரு பகுதியை காவன்திஸ்ஸ மன்னன் ஆட்சி செய்து
கொண்டிருந்தான். தூரநோக்கு கொண்டு ஒருவராக கருதப்படும் காவன்திஸ்ஸ பலம் பொருந்திய எல்லாளனுக்கு
எதிராக அக்கால கட்டத்தில் போர் புரிய முயற்சிக்கவில்லை . காவன்திஸ்ஸ தெற்கு
பகுதியை ஆட்சி செய்து கொண்டிருக்கும் அங்கு அரசியல் மற்றும் ஆட்சி இஸ்திரத்தன்மை
காணப்படவில்லை. தனது மகனான துட்டகைமுனுவை எல்லாளனுக்கு எதிராக பல வருடங்களுக்குப்
பின்பு போரிட வைப்பதற்கு காவன்திஸ்ஸவுக்கு எண்ணம் இருந்தது . எனவே அவனை
அதற்காகவே தயார் படுத்தி வந்தான்.
காவன்திஸ்ஸவின் இறப்புக்குப் பின் தனது
சகோதரனான திஸ்ஸவின் சில ஆட்சிப் பிரதேசங்களை அவன் கைப்பற்றி தெற்கில் அவனது
ஆட்சியை நிலை நிறுத்தினான் . பின்பு அவனது நோக்கம் வடக்கை நோக்கி திரும்பியது.
சாதுரியமான ஆட்சியாளனான துட்டகைமுனு வடக்கில்
எல்லாளனுக்கு எதிராக படை திரட்டினான் . நேருக்கு நேர் சந்தித்த அவர்கள் குறித்த
யுத்தத்தில் தம் இருவரை தவிர வேறு எந்த ஒரு வீரனினதும் உயிர் பறிபோக கூடாது என
குறிப்பிட்டு, தாமிருவரும் யானையின் மேல் ஏறி நேருக்கு நேர் தனியாக போரிடுவோம் என வேண்டினான்
துட்டகைமுனு . அந்த யோசனைக்கு எல்லாளனும் உடன்பட , வயதான எல்லாளனை இலகுவாக
வீழ்த்தி அனுராதபுரத்தின் ஆட்சியை தன் வசப்படுத்தினான் துட்ட கைமுனு மன்னன் .
நீதி தவறாத மன்னனான இருந்த எல்லாளனுக்கு தனது எதிரியாக இருந்தும் , அவர்
இறந்த இடத்தில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கும் படி துட்டகைமுனு மன்னன்
கட்டளையிட்டான் . இன்றும் அனுராதபுரத்தில் அந்த நினைவுச் சின்னம் காணப்படுகின்றது.
எல்லாளனின் கல்லறை என பெயரிடப்பட்டிருந்த குறித்த இடமானது தற்போது “தக்கின ஸ்டுப” என பெயர் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது .
பல மன்னர்கள் இலங்கையை ஆட்சி செய்து
இருந்தாலும் நீதி தவறாமல் இலங்கையை ஆண்ட தமிழ் மாமன்னன் ஆக எல்லாளன் வரலாற்றில்
போற்றபடுகின்றார் .
No comments:
Post a Comment