தமிழ்
மன்னர்களின் ஆட்சியில் சிறப்பாக வாழ வளம் பெற்றிருந்த நாடு இலங்கை. அந்த வகையில் இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன்,
மற்றும் இலங்கையின் இறுதி மன்னன் யார் ? இவரை பற்றி பல பேர் அறிய வாய்ப்பில்லை ஏனென்றால்
சிங்கள மன்னனாகவே சித்தரிக்கப்பட்டு சிங்களவர்கள் போற்றப்பட்டு காட்டிக்
கொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஒரு தமிழ் மன்னன் ஸ்ரீ விக்ரம் ராஜசிங்கன் .
இவருடைய
காலம் 1798 முதல் 1815 ஆண்டு வரை வாழ்ந்திருக்கிறார்.கண்டி நாயக்கர் என்போர் இலங்கையின் கண்டி அரசை ஆண்டு
தென்னிந்திய நாயக்கர் அரச பரம்பரையை சேர்ந்தவர்களை குறிக்கும். நாயக்கர் பரம்பரையை
சேர்ந்த இவர்கள் கண்டியை தலைநகராகக் கொண்டு 1707-ம்
ஆண்டுக்கும் 1815
ஆம் ஆண்டுக்கு இடையில் ஆண்டு
வந்தனர் .
கண்டிய அரச
மனதுரவுகளுடன் செய்து கொண்ட உடன்படிக்கை
வழியாகவே இவர்களுக்கு கண்டி அரசின் அரசரமை கிடைத்திருக்கிறது. இந்த மரபு சார்ந்த நான்கு அரசர்கள் கண்டியை
ஆண்டு இருக்கிறார்கள். இவர்கள் இந்துக்களாக இருந்த போதிலும் பின்னர் பௌத்தர்களாக
மதம் மாறினார்கள். இலங்கையில் பௌத்த மதத்தின் மறுமலர்ச்சிக்கு இவர்கள் பெரும் தொண்டாற்றி
உள்ளதாக வரலாறு சொல்கிறது. கண்டி அரசு மரபேர் மதுரை நாயக்கர் அல்லது தஞ்சை
நாயக்கர் மரபிலிருந்து பெண்ணெடுக்கும் வணக்கத்தைக் கொண்டிருந்தார்கள் .
1782 தொடக்கம் 1798 ஆம் ஆண்டு வரை வாழ்ந்து ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கனுக்கு ஐந்து
மனைவிகள் இருந்தும், ஒருவருக்கும் பட்டத்திற்குரிய வாரிசு இருக்கவில்லை. இந்த
நிலைமையை சாதகமாக்கிக் கொள்ள அதிகாரிகளும் பிரதானிகளும் தருணம் பார்த்துக்
கொண்டிருந்தார்கள். அதே வேளை மன்னர் வாரிசு என்று இறக்க நேரிட்டது .
தனக்கு பின்
அரசாட்சி மேற்கொள்ள வேண்டும் தம்பி முத்துசாமியை இறப்பதற்கு முன் மொழி கூறி
இளவரசனாக மன்னர் நியமனம் செய்திருந்தார் ஆனால் மன்னரின் மரணத்திற்கு பின்னர்
அரசாட்சியில் கண் வைத்துக் கொண்டிருந்த கண்டி மந்திரிகள் ஒருவரான பிலிம்தலாவ அரச
ஆட்சியை தனது கட்டுப்பாடில்
வைத்திருக்கும் நோக்கில் மன்னரின் மரணத்திற்கு பின் முத்துசாமியை
நியமிக்கவிடவில்லை .
மன்னரின் இரண்டாவது மனைவியின் சகோதரனான கண்ணு சாமியை
மதுரையிலிருந்து அழைத்து வந்து அரசன் ஆக்கினான். கந்தசாமி ஸ்ரீ விக்கிரமசிங்க என்ற
பெயரில் 1798 இல் மகுடம் சூட்டப்பட்டார் .நாட்டை
விட்டு துரத்தப்பட்ட மன்னரின் மூத்த மனைவியும் சகோதரன் முத்துசாமியும்
ஆங்கிலேயரிடம் தஞ்சம் அடைந்தார்கள். ஸ்ரீ விக்ரமசிங்கவின் ஆட்சியின் போது இலங்கை
கரையோர பகுதிகளை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பேற்றிய பிரித்தானியர் கண்டி அரசின்
தலையிடவில்லை. ஆனால் பிலிமதலாவ அரசாட்சியை கைப்பற்றுவதற்காக நயவஞ்சகமாக கண்டி
அரசனை பிரித்தானியருக்கு எதிராக தூன்றி, பிரித்தானியர் மூலம் கண்டியை கைப்பற்றி
தானே ஆட்சி அமைக்கலாம் என்று நம்பி இருந்தான் .
ஆள்வதைக்கு
அது குறித்து தெரிவித்து உதவியும் கூறினான். ஆனால் ஆங்கிலேயர்கள் அதற்கு இணங்க மறுத்த
நிலையில் இருதரப்புக்கும் இடையில் சண்டையை மூட்டிவிடுவதில் இறங்கினான் பிலிமதலாவ .
1803 ஆம் ஆண்டு
மார்ச் மாதம் 22ஆம் தேதி போர் அறிவிக்கப்பட்டது . பிரித்தானியர்கள்
எதிர்ப்புக்கள் இன்றி கண்டிக்குள் நுழைந்தார்கள் . கண்டி அரசன் தலைமறைவாக இயங்க நேரிட்டது . இந்த
இடைவெளியை பயன்படுத்தி யாழ்ப்பாண கோட்டையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்த
முத்துசாமியை , 1803
ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆள்வதி
மெட்ரோவல் மன்னனாகப் பிரகடனம் செய்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பிலிமதலாவ ஆள்வதற்கு எழுதிய கடிதத்திற்கு பதிலளித்து ஆள் பதி சில நிபந்தனைகளை முன் வைத்தார். அதில் ஒன்று பிலிமதலாவயை அரசன் ஆக்குவதால் முத்துசாமியை வன்னி பகுதிக்கு அரசனாக வேண்டும் என்பதுதான் ஒரு நிபந்தனை. ஆனால் இதற்குள் ஆங்கிலேய படைகள் போரில் பலவீனம் முற்றுக் கொண்டு போவதை அறிந்த ஸ்ரீவித்ரம ராஜசிங்கன் மீண்டும் அரண்மனைக்கு வந்து போரை முன்னெடுத்தார்.
அதில் ஆங்கிலேய படையினர் கொல்லபட்டார்கள் . போரும் ஓய்ந்தது சமாதான பேச்சுவார்த்த இருதரப்புக்கு நடந்தன. மேசர் தேவியுடன் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையும் செய்து கொள்ளப்பட்டது. அதில் ஆங்கிலேயர்கள் கோரிக்கைகளில் முக்கியமாக பாதுகாப்பாக திரும்பிப் போக உதவுவது . முத்துசாமியை மீண்டும் அழைத்துக் கொண்டு போவது உள்ளிட்ட அந்த கோரிக்கைகள் அதில் உள்ளடக்கம் .
பிலிமதலாவ அதற்கு முன்னரும் இரு தடவைகள் அரச கவிழ்ப்பு சதி
முயற்சிகளில் ஈடுபட்டமை அறியப்பட்டாலும் அவன் மன்னிக்கப்பட்டான். ஆனால் மூன்றாவது
தடவையும் பிடிபட்டபோது அவன் கொல்லப்பட்டான் . ஆனாலும் கண்டி அரசனுக்கு எதிரான சாதி
அத்தோடு முடியவில்லை. பிலிமதலாவைக்கு பதிலாக அவனது இடத்துக்கு அவனது மருமகன் ஆன எகலப்புல
அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவனும் தனது மாமனை போலவே அரசனுக்கு எதிராக
செயற்பட்டு குழப்பங்களை தோண்டிவிட்டான் . இதனைத் தொடர்ந்து எகலப்பொல தப்பி
கொழும்பில் பிரித்தானியருடன் தஞ்சம் அடைந்தான் . தனது குடும்பத்தை மன்னர்
கொன்றுவிட்டதாக அழுது புலம்பினர் .
நித்திரை இழந்து நிம்மதியும் இழந்தார் மன்னர்.
இந்த தருணம் பார்த்து எகலபொலவின் வழிகாட்டலில் பிரித்தானியர் மீண்டும் 1815 பிப்ரவரி 10 ஆம் திகதி
கண்டிக்குள் நுழைந்தார்கள் . கண்டி மெதமஹநுவரவில் ஒரு ஆலமரத்தடியில் அமைந்திருந்த கிராம தலைவன்
அப்ரால ஆராய்ச்சி வீட்டில் மன்னர் மறைந்திருப்பதை அடையாளம் கண்ட எக்நெலியவின்
ஆட்கள் வீட்டை சுற்றி வளைத்து கதவை உடைத்து உள்ளே நுழைந்து மண்ணறை பிடித்தார்கள் .
அந்த
நேரத்தில் எக்னேலிய தனது துப்பாக்கியை எடுத்து சுடுவதற்கு எத்தனித்த போது , அதை
பார்த்த மன்னரின் விசுவாசியான மடப்புள்ளே ராலஹாமி முன்னாள் பாய்ந்து மன்னரை நோக்கி வந்த
தோட்டாக்களை தன் நெஞ்சில் வாங்கி, தமது நேசத்திற்குரிய மன்னனுக்கு தன்னுயிர்
நீத்ததாக சொல்லப்படுகிறது.
அதே வேளை
வெள்ளையர் படை அங்கே வர , அவர்கள் மன்னரையும் ஏனையோரையும் காப்பாற்றி தமது
பாதுகாப்பின் கீழ் வைத்துக் கொண்டார்கள். பிறகு வெள்ளையர்களால் மன்னர் குடும்பம்
பாதுகாப்பாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் .
கண்டி
மன்னன் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்கு பிறகு 1815 பிப்ரவரி இரண்டாம் திகதி கண்டி
ஒப்பந்தம் ஆங்கிலேய அதிகாரிகள் தலைமையில் கைச்சாத்திடப்பட்டது.எகலபொல உள்ளிட்ட
முக்கிய பிரமுகர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள் . மன்னரின் ஆசை நாயகிகள்
இருந்த அந்தப்புறமான இன்றைய
அருங்காட்சியகத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக
கூறப்படுகிறது.
ஒப்பந்தத்தில்
முக்கியமாக மன்னன் ஸ்ரீவிக்ரம ராஜசிங்கனுக்கு இனி கண்டியில் எந்த அரசுருமையும் கிடையாது,
அதேபோல் அவரது வாரிசுகளுக்கும் எந்த உரிமையும் கூற முடியாது. மன்னரின் வம்சத்தை
சேர்ந்த உறவினர்களான ஆண்கள் எவரும் கண்டியில் தாங்கக்கூடாது. கண்டி அரசுக்கு
உட்பட்ட பகுதிகள் அனைத்தும் இனி பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இயங்கும் . ஆளுநர்
எழுத்து மூல உத்தரவு என்று எவருக்கும் மரண தண்டனை வழங்கப்படக்கூடாது. உள்ளிட்ட பல விடயங்கள் அந்த ஒப்பந்தத்தில்
உள்ளடக்கப்பட்டிருந்தன.
மன்னருடைய சொத்துக்கள் பல கொள்ளை அடிக்கப்பட்டதை
விடுத்து மீதி உள்ள பல தங்கத்தில் ஆன பொருட்கள் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டதாக
கூறப்பட்டுள்ளது . கண்டி இராஜ்ஜியத்தை இழந்த ராஜசிங்கன் கைதாகி தமிழ்நாட்டுக்கு
நாடு கடத்தப்பட்ட போது அவரின் உறவினர்கள் உள்ளிட்ட 60 பேர் அந்த கப்பலில் பயணித்தார்கள் . 7 வயது
சிறுவனாக இருந்த தனது மகன் கந்தசாமியை கண்டிக்கு அழைத்து வந்த சுப்பம்மாலும் வயது முதிர்ந்த
நிலையில் மன்னரோடு கப்பல் பயணித்தார். மன்னருடைய நான்கு மனைவியரும் உடன் சென்றார்கள் .
கப்பல்சென்னை
துறைமுகத்தை நெருங்கிய போது பட்டத்து ராணி சாவித்திரி தேவி இறந்துவிட்டார்.
அவருடைய பிரேதத்தை சென்னை கடற்கரையிலே அடக்கம் செய்த அரசு குடும்பம் , பிறகு
சாவித்திரி தேவியின் அஸ்தியுடன் வேலூர் பாலாற்றங்கரை ஓரத்தில் ராணி அஸ்தியை வைத்து
கண்டி அரசு குடும்பத்தின் முதல் கல்லறை இந்திய மண்ணில் கட்டப்பட்டது. மன்னரும் அரசியரும் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார்கள்.
18 ஆண்டுகால
சிறைவாசத்தின் பின்னரும் மன்னர் ராஜசிங்கன் தனது 52 வது வயதில் 1833 ஆம் ஆண்டு
ஜனவரி 30 ஆம் தேதி மரணம் அடைந்தார். அவருடைய
அஸ்தியை பாழாற்றில் கரைத்த மன்னர் குடும்பம், மன்னருக்கு அங்கே கல்லறை எழுப்பியது .பின்னர்
உயிருடன் இருந்த மூன்று மன்னரின் மனைவிகளையும் பிரிட்டிஷ் அரசு விடுதலை செய்தது. கண்டி மன்னர்
கல்லறைக்கு அருகிலேயே அவருடைய நான்கு மனைவிகள் கல்லறைகளும் காணப்படுகின்றன.
கண்டி மக்களால் பெரிதும் போற்றப்பட்ட கண்டி ஸ்ரீ
விக்ரம் ராஜசிங்கன் பிறகு கொடூரமான மனிதனாக சித்தரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்
என்பதுதான் கண்டி வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து, ஆனால் மன்னருடைய மனமாற்றத்திற்கு
அவரோடு உடன் இருந்த அமைச்சர்களும் பிரதானிகளும் தான் காரணம் என்று சொல்லி
இருக்கிறார் கே என் டி சந்திரசேன . இவர் மன்னன் ராஜசிங்கனின் வரலாற்று தகவல்களுடன்
தொடர்புடைய ஒரு நபர் . இவருடைய வீட்டில் கண்டி மன்னன் கைது செய்யப்பட்ட போது ராணி
வெங்கடரங்கம்மாள் இடம் இருந்து பறிக்கப்பட்ட
ரவிக்கை பல வருடங்களாக பாதுகாப்பாக
இருந்து வந்ததாம் பின்னர் அருங்காட்சியத்திற்கு அது கொடுக்கப்பட்டதாக
கூறப்படுகிறது.
கண்டி
மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் நாயக்கர் ஆக இருந்த போது கண்டியை ஒரு பௌத்த
அரசனாகவே ஆட்சி செய்து வந்துள்ளான் . அவனது 17வருட கால ஆட்சியில் பௌத்த விகாரைகள் மற்றும் ஆன்மிக விடயங்கள்
பலவற்றை செய்த மன்னன், கண்டி வாவியை அமைத்ததோடு பத்திரிப்பு எண்கோண மண்டபத்தையும்
கட்டி அழகு படுத்தி இருக்கிறார் .
இலங்கையின் இறுதி மன்னன் யார் ? என இந்த ஆக்கத்தின் மூலம் தெரிந்து கொண்டு
இருப்பீர்கள் .
No comments:
Post a Comment