டில்மா டீ உருவான கதை - சிலோன் டீ


 

இலங்கையின் நாமத்தை உலகறிய செய்த , இலங்கை தயாரிப்பை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்த டில்மா தேயிலை நிறுவனத்தின் ஸ்தாபகர் தனது 93 வது வயதில் இன்று காலமானார் . இந்த பதிவு அவர் தொடர்பாக ஆகும் .


அமெரிக்காவின் போர்ப்ஸ் சஞ்சிகையில் உள்ளடக்கப்பட்ட , 2022 ஆம் ஆண்டு இலங்கையில் மிக சிறந்த  வியாபாரங்களில் 18 வது இடத்தைப் பிடித்த  நிறுவனம் டில்மா தேயிலை நிறுவனம் ஆகும் .


தேயிலை தோட்டங்கள் , தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ,அதன் உற்பத்தி  நடவடிக்கைகள் , களஞ்சியம் செய்தல் , பேக்கட் செய்தல் , விநியோகம் , விளம்பரம் மற்றும் அவற்றை ஏற்றுமதி செய்தல் போன்ற ஒரு முழுமையான செயல்பாடுகள் அனைத்தையும்  ஒரே நிறுவனமாக செய்யும் உலகில் பிரசித்தி பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக டில்மா டி  நிறுவனம் காணப்படுகிறது .


வருடத்தின் சிறந்த தயாரிப்பு , மிக விருப்பமான தேயிலை , சிறந்த தேயிலை நிறுவனம் , வாழ்நாள் சேவை விருது , சிறந்த வெளிநாட்டு வியாபாரி , போன்ற பல மக்கள் விருதுகளை மெரில் ஜே பெர்னாண்டோ மற்றும் டில்மா டி நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ளது.


ஒருவரிடம் ஏன் வியாபாரம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டால் , அவர்கள் கூறும் பதில்கள் “எனக்கு நான் செய்யும் தொழிலில் சுதந்திரம் இல்லை, எனக்கு எட்டில் இருந்து ஐந்து வரை வேலை செய்ய பிடிக்கவில்லை , எனக்கு வழங்கும்  சம்பளம் போதாது , எனக்கு பணம் வேண்டும் , ஒருவருக்கு அடிமையாக வேலை செய்ய விருப்பமில்லை  போன்ற பல காரணங்களை குறிப்பிடுவார்கள். 

ஆம் ,இவை பிழையானவை அல்லஆனால் உலகில் மாற்றங்களை உருவாக்கிய பல தயாரிப்புகளை உருவாக்கிய சிறந்த வியாபாரிகள் பலரை நாம் பார்த்தோம் என்றால் அவர்களுக்கு இவற்றை விட மேலானதொரு குறிக்கோள் மற்றும் நோக்கம் இருந்திருக்கிறது .


உலகில் சாதித்த ஒவ்வொரு வியாபாரிகளிடமும் புதிய  வித்தியாசமான குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்கள் இருந்திருக்கிறன.


உதாரணமாக , ஆப்பில் நிறுவனத்தின் ஸ்தாபகர் குறிப்பிட்டது என்னவென்றால் "ஒவ்வொரு விடயங்களை மக்களுக்கு  இலகுபடுத்தி பாவனை செய்ய இலேசாக  உருவாக்க வேண்டும்” . அதேபோன்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் குறிப்பிட்டது என்னவென்றால் “ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மேசை இருக்க வேண்டும் அதன் மேல் தனது இயக்க முறை (ஒபெறேடிங் சிஸ்டம் ) கொண்ட கணினி இருக்க வேண்டும் ” என்பதாகும் .


"ஒவ்வொரு மனிதனும் விண்வெளிக்கு சுற்றுலா செல்வதை ஒரு தெரிவாக வைத்திருக்க வேண்டும்" என்பது உலக கோடிஸ்வரர் எலோன் மஸ்க் அவர்களின் நோக்கமாக இருந்தது .


இலங்கையில் உள்ளவர்கள் தற்போது பார்த்து வியக்கும்  ஐக்கிய அரபு ராஜ்ஜியம் போன்ற நாடுகள் உருவானது, வளர்ச்சியடைந்தது அதன் தலைவர்கள் கொண்டிருந்த குறிக்கோள் மற்றும் தூர நோக்கங்களின் காரணமாக ஆகும். இவ்வாறு ஒவ்வொரு வியாபாரிகளுக்கும்  குறிக்கோள்கள் மற்றும் தூற நோக்கங்கள் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.


இதேபோன்ற ஒரு குறிக்கோள் தூரநோக்கு டில்மா நிறுவனத்தின் ஸ்தாபகர் மெரில் ஜே பெர்னாண்டோவுக்கும்  இருந்தது . அது என்ன அது தொடர்பாக பார்ப்போம் .


இலங்கை பிரித்தானியர்களின் கீழ் இருந்தபோது அவர்களிடம் தேநீரை சுவைத்துப் பார்க்கும் ஒரு தொழில் காணப்பட்டது .ஆனால் அவற்றை செய்வதற்கு இலங்கையர்கள் அனுமதிக்கப்படவில்லை . அதற்கு அவர்கள் குறிப்பிட்ட காரணம் இலங்கையர்கள் அதிகமாக காரமான உணவுகளை உண்ணக்கூடியவர்கள் எனவே அவர்களால் இந்த தொழிலை சரியாக செய்ய முடியாது என்பதாகும்.


ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் பிரித்தானியர்களின்  தேயிலை தொழிற்சாலை ஒன்றுக்கு இலங்கையர்கள்  ஆறு பேரை உள்வாங்க இருப்பதாக தெரிய வந்தது . இந்த ஆறு பேரில் முதலாவதாக அங்கே உள் நுழைந்தது மெரில் ஜே பெர்னாண்டோ ஆவார் .இவ்வாறு தான் இவரின் தேயிலை பயணம் ஆரம்பமாகிறது .


இங்குதான் இவர் தேயிலை தயாரிப்பு தொடர்பான பல விடயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுக் கொள்கிறார் . இவ்வாறு இவர் தேயிலை தொழில்துறையினுள் பிரவேசித்த பின்பு அங்கு இருக்கும் மூன்று முக்கியமான பிரச்சினைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக  அவர் அவதானம் பெற்றுக் கொள்கின்றார்.


அதில் முதலாவது , இலங்கையிலிருந்து தேயிலை விற்பனையாளர்கள் தொடர்பாக ஆகும் . தேயிலை விற்பனையாளர்கள் தேயிலை தோட்டங்களில் இருந்து மிகக் குறைந்த விலையில் தேயிலை கொழுந்துகளை பெற்றுக் கொண்டு அவற்றை பாரிய இலாபம் வைத்து விற்பனை செய்வதை அவதானிக்கின்றார் .இது தேயிலைக்கு மட்டுமன்றி கொக்கோ மரக்கறிகள் போன்ற பல பொருட்களுக்கு நடைபெறுவதையும் அவதானிக்கின்றார்.


இரண்டாவதாக , தேயிலையை விற்பனை செய்வதற்காக ஆங்கிலேயர்கள் அங்கிருந்த பிரசித்தி பெற்ற நபர்களை விளம்பரங்களுக்கு பயன்படுத்துகிறார்கள் . ஆனால் அந்த விளம்பரங்களில் நடிப்பவர்கள் குறித்த இலங்கை தேநீரை ஒரு முறையாவது பருகி இருப்பார்களா என்பது அவரின் மனதில் எழுந்த இன்னும் ஒரு கேள்வியாகும் .


மூன்றாவது ,மெரில் ஜே பெர்ணான்டோவுக்கு குறித்த ஆங்கிலேய கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது வேலை நிமித்தம் இங்கிலாந்து செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அங்கு அவர் சென்று இருந்த பொழுது இலங்கையில் இருந்து கொண்டு வரப்படும் சிலோன் டி ஆனது வெறு பல நாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் சில மோசமான டீ வகைகளுடன் கலப்பு செய்யப்பட்டு அவை பக்கட் செய்யப்பட்டு இலங்கை தேயிலை என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதை அவதானிக்கிறார் .


இதன் பின்பு தான் இவருக்கு தான் ஒரு தேயிலை நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் மனதில் தோன்றுகிறது . இந்த யோசனை அவருக்கு வரும் பொழுது அவரின் வயது 24 வருடங்கள் ஆகும் .ஆனால் அவர் குறித்த யோசனையை செயல்முறை படுத்தும் பொழுது அவருக்கு வயது 58 ஆகும் . சுமார் 34 வருடங்களுக்குப் பின்பு தான் குறித்த  யோசனையை நடைமுறை செய்ய ஆரம்பிக்கிறார் . ஆனால் அதனை அவர் செய்ய ஆரம்பிக்கும் பொழுது இலங்கை டி அதாவது சிலோன் டி சரிவை நோக்கி சென்று கொண்டு இருந்த காலமாகும் .


இதற்கு முக்கியமான காரணம் மல்டி நேஷனல் கம்பெனிகள் ஆகும் . குடும்பம் குடும்பங்களாக செய்து வந்த இந்த தேயிலை தொழிலை மல்டிநேஷனல் கம்பெனிகள் முழுமையாக கொள்வனவு செய்து ஒரு நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்தது. அதீத இலாப நோக்கத்தை கொண்ட இந்த கம்பெனிகள் மூலம் சிலோன் டி  தரம் குறைவட தொடங்கியது . அதேபோன்று சிலோன் டி என்ற நாமத்தை இல்லாமல் செய்யவும் இந்த மல்டி நேஷனல் கம்பெனிகள் முனைந்தது .ஏனென்றால் சிலோன் டி என்றால் அதற்கென்று ஒரு பெறுமதி இருந்தது தரம் இருந்தது சுவை இருந்தது . ஆனால் அதனை அழிக்கும் பொழுது இவர்களது மோசமான தேயிலையை  சந்தையில் பாரிய விலைக்கு விற்று அதீத இலாபம் உழைக்கலாம் என்ற எண்ணத்தின் காரணமாக இவ்வாறு செய்ய அவர்கள் முனைந்தார்கள் . இதன் காரணமாகவே சிலோன் டி சரிவை நோக்கி செல்ல தொடங்கியது .


இந்த நிலையில் இருக்கும் பொழுது தான் மெரில் ஜே பெனான்டோ தேயிலை நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க  எண்ணம் கொள்கிறார். முதலில் வியாபாரம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு சிறந்ததொரு பெயர் வேண்டும் .அதற்காக தில்ஷா என்ற தனது மகனின் பெயரிலிருந்து டில் என்ற எழுத்தையும் மலிக் என்ற தனது இன்னொரு மகனின் பெயரிலிருந்து மா என்ற சொல்லையும் எடுத்து டில்மா என தனது நிறுவனத்துக்கு பெயரிட்டார் . பின்பு அதனை ஆஸ்திரேலியா ஏற்றுமதி செய்யும் பொழுது ஆஸ்திரேலியாவுக்கு பொருந்தும் வகையில் எச் எழுத்தையும்  இணைத்துக்கொண்டார் .


இரண்டாவது அதனை விளம்பரம் செய்ய ஒரு பிரசித்தி பெற்ற நபரை தேடினார் . பின்பு அவரின் நண்பரின் ஆலோசனைக்கு அமைய தனது படத்தையே டில்மா தயாரிப்பில் இணைத்து வெளியிட அவர் முடிவு செய்தார் .


டில்மா தொடர்பாக அவர் எடுத்த முக்கிய தீர்மானம் என்ன என்றால்   அதன் அனைத்து நடவடிக்கைகளும் ஒரே ஒரு நிறுவனத்தின் கீழ் இயங்க வேண்டும் என்பதாகும் . அதாவது குறித்த தேயிலை வளர்ப்பில் இருந்து அதனை பறிப்பது தொட்டு அது பேக்கட் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் செயல்முறை வரை அனைத்து நடவடிக்கைகளும் ஒரே நிறுவனத்தின் கீழ் இயங்க வேண்டும் என்பதாகும். இதன் காரணமாக இதன் தரம் உயர்வடையும் என அவர் உறுதியாக நம்பி இருந்தார் .


மெரில் ஜே பெனான்டோ டில்மா வியாபாரத்தை ஆரம்பிக்கும் பொழுது அவருக்கு தனித்துவமான ஒரு பெயர் இருந்தது . 34 வருடங்கள் தேயிலை தொழில்துறையில் அனுப்பவும் இருந்தது மற்றும் இலங்கை தேயிலைக்கு வெளிநாடுகளில் இருந்த நன்மதிப்பு இவை மூன்றையும் பயன்படுத்தி அவரின் வியாபாரத்தை அவர் விளம்பரப்படுத்த தொடங்கினார்.


இருப்பினும் இவர் வியாபாரத்தை ஆரம்பித்த ஆரம்ப காலங்களில் இவருக்கு பல பத்திரிகைகளில் இவர் தொடர்பாக மோசமான பல கட்டுரைகள் வெளிவர ஆரம்பித்தது .இவை  மல்டிநேஷனல் கம்பெனிகளால் சிலோன் டி ஐ வீழ்த்த செய்ய முனைந்த விடயமாக கருதப்படுகிறது . வீழ்ந்திருந்த சிலோன் டி மீண்டும் இவ்வாறு எழுந்து வருவதை அந்த மல்டிநேஷனல் கம்பெனிகள் விரும்பவில்லை . இதன் காரணமாக மல்டி நேஷனல் கம்பனிகளின் வியாபாரம் பாதிக்கப்படும் என அஞ்சி செயற்பட்டனர் .


இப்படி இருக்க மெரில் ஜே பெர்ணான்டோ  தனது தயாரிப்பை ஆஸ்திரேலியாவில்  சந்தைப்படுத்த ஆரம்பிக்கிறார் . அங்கு அதிக அளவில் ஒரு நிறுவனத்தின் தேயிலை விற்பனையாகிக் கொண்டு இருந்தது . அதன்போது அதன் விலையையும் விட இரண்டு மடங்கு அதிகமான விலையில் சிலோன் டி அங்கு சந்தைப்படுத்தப்படுகிறது . இருப்பினும் விற்பனையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கு இருந்த தேயிலையின் விலையை விட சற்று குறைத்து இவர் மீண்டும் அதனை விற்பனை செய்கிறார் . இதனை அவதானித்த ஆஸ்திரேலியாவில் இருந்த அந்த தேயிலை விற்பனை கம்பெனி மீண்டும் அவர்களது விலையை பாரிய அளவில் குறைக்கிறார்கள் . சிலோன் டீயை முழுமையாக சந்தையில் இருந்து அகற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் குறித்த செயற்பாடு நடைபெறுகிறது .


ஆனால் யாரும் எதிர்பார்க்காத விடயம் அங்கு நடைபெறுகிறது . சிறிது நாட்களின் பின்பு குறித்த விற்பனையாளர்களிடம் இருந்து டில்மா அதிபர் மெரில் ஜே பெர்னாண்டோவுக்கு  அழைப்பு ஒன்று வருகிறது . அதன் போது அந்த விற்பனையாளர்கள் தெரிவித்த விடயம் என்னவென்றால் “சிலோன் டீயை கொள்வனவு செய்து சென்ற ஆஸ்திரேலியாவின்  இருக்கும் பலர் தமக்கு ஈமெயில் மற்றும் தொலைபேசியின் மூலம் அழைத்து மீண்டும் அவர்கள் பழைய சிலோன் டீயின் சுவையை உணர்ந்ததாகவும் அதனை மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வந்ததற்காக குறித்து விற்பனையாளர்களுக்கு ஆஸ்திரேலியா நுகர்வோர்  நன்றி தெரிவித்ததாகவும் மெரில் ஜே பெர்னாண்டோவுக்கு ஆஸ்திரேலியா விற்பனையாளர்கள் தெரிவித்தனர் .


இதுவே டில்மா சிலோன் டீயின் முக்கியான புள்ளியாகும் . இந்த தருணத்தை தனது பல வருட கால வாழ்க்கையில் தான் பெற்ற தான் கேட்ட சிறந்த வார்த்தைகளாக மெரில் ஜே பெர்னாண்டோ விபரிக்கின்றார்.


இவ்வாறு தான் சிலோன்டி டில்மா நிறுவனம் தனது வியாபாரத்தை ஆரம்பித்து அதற்கான சிறந்த தரத்தையும் பெற்றுக் கொண்டது.

No comments:

Post a Comment