கண்டி சுற்றுலா இடங்கள்


 

இலங்கையின் இதய பகுதியில் அமைந்துள்ளது கண்டி நகரம். பண்டைய அரசர்களின் தலைநகரமாக விளங்கியது. மற்றும் இக்கால இலங்கையின் கலாச்சாரம் மற்றும் மதமையங்களில் ஒன்றாக திகழ்கின்றது. கண்டியில் மண்டியிட்டு வணங்க பல புத்தர் ஆலயங்களும் ,வண்டி கட்டி பார்வையிட பல சுற்றுலா இடங்கள், சண்டித்தனம் மிக்க பல யானைகளும், அண்டி வந்து உதவும் அன்பான மக்களும், உண்டி உண்டு மகிழ பல தரமான உணவு விடுதிகளும் நிறைந்து இருக்கின்றன .


கண்டியில் கண்டிப்பாக காண வேண்டிய 12 அற்புதமான கண்டி சுற்றுலா இடங்கள் பற்றி இப்போது பார்ப்போம்.


 முதலாவது தலதா மாளிகை, தலதா மாளிகை என்பது இலங்கையின் கண்டிநகரில் உள்ள புகழ்பெற்ற பௌத்த ஆலயமாகும். பௌத்த சமயத்தவர்களின் முக்கியமான புனித ஸ்தலங்களில் ஒன்றாக இருக்கும் இவ்வாலயத்தில் புத்தரின் புனித பல் வைக்கப்பட்டுள்ளது. 1715 ஆம் ஆண்டு வரை கண்டி ராஜ்ஜியத்தை ஆண்டு வந்த அரசர்களின் அரண்மனை வளாகத்தில் உள்ளே அமைந்துள்ள இவ்வாலயத்தின் மேற்குறையானது தங்க நிறத்தில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.


இலங்கையின் முக்கியமான பௌத்த பீடங்களான மல்பத்தை பீடம் ,அஸ்கிரிய பீடம் ஆகியவற்றை சேர்ந்த பீடாதிபதிகள் ஆண்டுக்கு ஒருவராக சுழற்சி முறையில் இவ்வாலயத்தில் பூஜைகள் செய்து வருகிறார்கள். தினமும் மூன்று வேளைகள் பூஜைகளும் புதன்கிழமைகளில் நன்முறா மாங்கல்யாய் எனப்படும் புனித நீராட்டும் நடைபெறுகிறது . இப்புனித நீராட்டு விழாவில் புத்தரின் புனித பல்லானது நறுமண பூக்கள் மற்றும் மூலிகைகள் சேர்க்கப்பட்ட நீரால் நீராட்டப்படுகிறது . மருத்துவ குணமிக்கதாக கருதப்படும் இந்த புனித நீரானது பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.


ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் எசெல பெரஹர கண்டியில் வெகு பிரசித்தம் . இத்திருவிழாவில்   வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட சுமார் 65 யானைகள் சூழ ,  புத்தரின் புனித பல் நகர் வலமாக  எடுத்து வரப்படுகிறது .


இரண்டாவது கண்டி ஏறி , கண்டி நகரின் இதய பகுதியில் அமைந்துள்ள கண்டி ஏறி செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு ஏரியாகும் . இலங்கையை ஆண்ட கடைசி மன்னனான விக்ரம ராஜசிங்கனால் 1807 ஆம் ஆண்டு தலதா மாளிகையை அடுத்து உருவாக்கப்பட்ட இவ்வேரி ஆனது பார்கடல் எனவும் அழைக்கப்படுகிறது.


1815 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படையெடுப்பு காரணமாக இந்த ஏரியின் ஒரு பகுதி முழுமையாக கட்டமைக்கப்படவில்லை. கண்டி ஏரியுடன் தொடர்புடைய பல புராணக் கதைகளும் உலவுகின்றன . அதாவது ஏரியை உருவாக்கிய அரசன் ஏரியனுள் அரண்மனைக்கு இட்டுச் செல்லும் ஒரு ரகசிய சுரங்க பாதையை அமைத்துள்ளதாக நம்பப்படுகிறது.  இலங்கையில் பார்வையிட வேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்றாக இருக்கும் கண்டி ஏறி  நகரின் மத்தியில் அமைந்திருந்தாலும் இது வாகனங்கள் சந்தை விற்பனர்களின் கூச்சல்கள் உள்ளிட்ட நகர்ப்புற இரைச்சல்கள் குறைவான ஒரு பகுதியாகவே இருக்கின்றது .


 மூன்றாவதாக கிரகாமா தேயிலை தோட்டம் , உலகின் மிக முக்கியமான தேயிலை உற்பத்தியாளர்களில் இலங்கையும் ஒன்று.  இலங்கையில் பல்வேறு பெரிய தேயிலை தோட்டங்கள் இருக்கின்றன . அவற்றில் ஒன்றுதான்கண்டி நகரில்  அமைந்திருக்கும் கிரகாமா தேயிலை தோட்டம். 2500 அடிக்கு மேல் உயரமான பகுதியில் வளரும் இத்தனை தோட்டத்தை நெருக்கமாக பார்வையிடுவது ஓர் ரம்யமான அனுபவத்தை தருகிறது .


புறநகரில் அமைந்திருக்கும் தொழிற்சாலையில் பசுமையான தேயிலை பச்சை நிறத்தில் இருந்து இருண்ட  காவி நிறத்திற்கு  மாற்றப்படும் . சுத்திகரிப்பு செயல்முறைகளையும் கண்டறியலாம். மேலும் இங்கு ஒரு தேயிலை அருங்காட்சியகமும்  அமைக்கப்பட்டு பார்வையாளர்கள் தேயிலைகள் தொடர்பான அறிவை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.


நான்காவது  பேராதனை தாவரவியல் பூங்கா, கண்டி நகரின் புறநகர் பகுதியான பேராதனையில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா இலங்கையில் மிகப்பெரிய தாவரவியல் பூங்காவாகும் . இலங்கையின் சிறப்பான காலநிலை காரணமாக 2000-க்கும் அதிகமான ஆண்டுகளாக மசாலா பொருட்கள் வர்த்தகத்திற்கான ஓர் சிறந்த இடமாக இலங்கை இருக்கின்றது . கண்டி  மசாலா தோட்டங்களில் மிளகு மற்றும் ஜாதிக்கையில் இருந்து கிராம்பு , லவங்கப்பட்டை மற்றும் ஏலக்காய் வரையிலான மசாலா பொருட்களின் ருசியான வாசனையை பார்வையாளர்கள் உணரலாம்.


கண்டிநகருக்கு சில கிலோமீட்டருக்கு அப்பால் அமைந்திருக்கும் பேராதனையில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவில் நான்காயிரத்திற்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தாவர வகைகள் இருக்கின்றன. இவற்றில் மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள், ஆர்டிக் மற்றும் பனை மரங்கள், பலவித பூஞ்செடிகள் உள்ளிட்டவை அடங்கும். மேலும் இங்குள்ள வாசனை திரவிய தோட்டம் கற்றாழையகம் ,அந்தூரியம் வளர்ப்போம் ஆகியவையும் இத்தாவரவியல் பூங்காவின் சிறப்பு அம்சங்களாக இருக்கின்றன .


ஐந்தாவது வைரவகந்தா விகார புத்தர் சிலை என்பது ஓர் மலையின் மீது கண்டி நகரை கண்டும் காணாதது போல் அமைந்திருக்கும் ஒரு பெரிய புத்தர் சிலையாகும் .இது கண்டி நகரின் குறிப்பிடத்தக்க மத நினைவு சின்னங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது . புத்தர் சிலை அமைந்திருக்கும் மலை உச்சியினை ஒரு மணி நேரத்தில் பார்வையாளர்கள் அடைந்து விடலாம். ஆனால் மிகுதியான வெப்பம் நிலவும் என்பதால் நண்பகல்  வேளையில் இங்கு செல்வதை தவிர்த்து விடுவது நல்லது .


மலை உச்சியை அடைந்ததும்  கண்டி மற்றும் அதன் சுற்றுப்புறத்தின் பரந்த காட்சிகளை காணமுடியும். கண்டிநகரின் பெரும்பாலான இடங்களில் இருந்தும் இந்த புத்தர் சிலையினை பார்க்க முடியும் . குறிப்பாக இரவு நேரத்தில் மின்சார விளக்குகளின் ஒளியில் இச் சிலையானது மிகவும் வசீகரமானதாக காட்சியளிக்கும்.  இந்த வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பாக காலணிகளை அகற்றி விட வேண்டும்.  பக்தர்கள் மலர்கள் மற்றும் எண்ணெய் விலக்குகளை காணிக்கையாக அளிக்கலாம் .


ஆறாவது கண்டி தேசிய நூதனசாலை . கண்டி தேசிய அருங்காட்சியகம் அல்லது கண்டி தேசிய நூதனசாலை எனப்படும் இந்த அருங்காட்சியகம்  கண்டியின் கடைசி மன்னனான விக்ரமசிங்கனின் அரண்மனையின் வளாகத்தில் அமைந்திருக்கின்றது.  கண்டி ராஜ்ஜிய காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், ஆபரணங்கள், கருவிகள் போன்றவற்றை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க 1946 ஆம் ஆண்டில் இவ்வருங்காட்சியகம் நிறுவப்பட்டது .


ஏழாவது உதவத்தை காடுகள் , கண்டி இராஜ்ஜிய  அரண்மனைக்கு அருகில் இருக்கும் மலையில் உருவாகி இருக்கும் இந்த காட்டின்  பரப்பளவு சுமார் 257 ஏக்கர் ஆகும். தமிழில் “உதவத்தை காடுகள்” எனவும் சிங்களத்தில் “ராஜகிய வன உத்யானய” அதாவது  அரச அரண்மனை  தோட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.


பல்வேறு பறவைகளின் சரணாலயமாக இருக்கும் இந்த மலைக்காட்டில் பலவகையான தாவரங்கள் இருக்கின்றன. மேலும் படர் கொடிகள், புதர்கள் மற்றும் சிறிய மரங்கள் ஆகியவையும் மிகுதியாக காணப்படுகின்றன . பல வகையான பாம்புகள் அட்டைகள் உள்ளிட்ட ஊர்வலம் ஜந்துக்களும் இக்காட்டில் வசிக்கின்றன . இக்காட்டை சுற்றிப்பார்க்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் .  ஆனால் காட்டுக்குள் செல்ல காதலர்களுக்கு அனுமதி இல்லை .


எட்டாவது கண்டி போர் கல்லறை , கண்டி போர் கல்லறை  என்பது கண்டிநகரில் உள்ள ஓர் பிரிட்டிஷ் ராணுவ கல்லறை ஆகும்.  முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்காக போரிட்டு உயர்நீத்த வீரர்களின் உடல்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன.  இங்கு நன்கு பராமரிக்கப்பட்ட இருநூற்று மூன்று கல்லறைகள் இருக்கின்றன . அவற்றுள் 107 பிரிட்டிஷ் வீரர்களின் கல்லறைகளும் 35 கிழக்கு ஆப்பிரிக்க வீரர்களின் கலரைகளும், 26 இலங்கை வீரர்களின் கல்லறைகளும், ஆறு கண்ணாடிய மூன்று இத்தாலிய , ஒரு பிரெஞ்சு மற்றும் , இரண்டு அடையாளம் தெரியாத வீரர்களின் கல்லறைகள் அடக்கம்  செய்யப்பட்டுள்ளன .  அமைதி தரும் இக்கல்லறை  தோட்டமானது இலங்கையின் காலணித்துவ வரலாற்றின் சாட்சியாகவும் , கடந்த ஆண்டுகளில் இலங்கை கடந்து வந்த கொந்தளிப்பான மாற்றங்களுக்கான சாட்சியாகவும் அமைந்திருக்கின்றது.


ஒன்பதாவது அலகல்ல மலைத்தொடர், இம்மலைத்தொடராவது  இலங்கையின் மத்திய மற்றும் சபரமுக மாகாணத்தின் எல்லையில் அமைந்துள்ளது. இது போர்துக்கீசியம் , டச் மற்றும் பிரிட்டிஷ் போன்ற மேற்கத்திய சக்தி வாய்ந்த நாடுகளில் இருந்து இலங்கையின் கலாச்சாரத்தையும் பௌத்த மதத்தையும் ஓர் இயற்கை தடையாக இருந்து கடந்த ஐந்து நூற்றாண்டுகளாக பாதுகாத்து வந்தது.


கண்டி ராஜ்ஜியத்தை இலக்காகக் கொண்ட மேற்கத்திய நாடுகளின் படையெடுப்புகளுக்கு எதிரான போர்களில் பெரும்பாலானவை அலகல்ல மலைகளில் நடைபெற்றுள்ளது.  கண்டிய மன்னர்களின் ஆட்சியில் படையெடுத்து வரும் வெளிநாட்டு படைகள் பாலனா போரில் தோற்கடிக்கப்பட்டன .  இலங்கையை வெளிநாட்டு சக்திகளிடம் இருந்து காக்கும் முக்கிய கோட்டையாக பாலனா கோட்டை திகழ்ந்தது.  மலையேற்றம் செய்வோருக்கு ஏற்ற இடமாக இருக்கும் அலகல்லா மலைத்தொடரை கொழும்பு கண்டி  ரயில் மூலமாக  இகலகோட்டை ரயில் நிலையத்திற்கு செல்வதன் மூலமாகவும் அல்லது பிலிமதலாவையில் இருந்து மொத்தவித்தாவுக்கு பஸ் மூலமாகவோ சென்று அடையலாம் .


பத்தாவது கண்டி முஸ்லிம் ஹோட்டல் ,  உண்மையான இலங்கை உணவுகளை  ருசிக்க விரும்புவோருக்கு வாய்ப்பு அளிக்கிறது கண்டி முஸ்லிம் ஹோட்டல் .  தரமான சுவையான பலவித உணவுகள் இங்கு நம்ப முடியாத அளவில் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.  மேலும் பிச்சிப்போட்டரொட்டிகளுடன் காய்கறிகள் மற்றும் இறைச்சியை சேர்த்து சமைத்து தரப்படும் “கொத்துரொட்டி”  எனும் உணவு இந்த ஹோட்டலில் வெகு பிரசித்தம் .


கண்டி முஸ்லிம் ஹோட்டல் ஆனது பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் விருப்ப உணவு விடுதியாகவும் பல வகையான இலங்கை உணவுகளை ருசிப்பதற்கான பிரதான இடமாகவும் இருக்கின்றது .


பதினொன்றாவது ராஜா அருங்காட்சியகம் ,  பௌத்த ஆலயமான தலதா மாளிகைக்கு சொந்தமான ஒரு யானையின் பெயர்தான் ராஜா.  தலதா மாளிகை திருவிழாக்களில் வருடாந்திர வீதி உலாவில் சுமார் 50 ஆண்டுகாலம் ராஜா பங்கேற்றுள்ளது.  தனது வாழ்நாளில் ஆசியாவில் மிகவும் பிரபலமான யானைகளில் ஒன்றாகவும் , தனது உன்னத நடத்தை பண்புகளால் உலக புகழ்பெற்றதாகவும் இருந்த ராஜா , கடந்த 1988 ஆம் ஆண்டு தனது 75 வது வயதில் இறந்து போனது.


ராஜா இறந்த நாளை தேசிய துக்க தினமாக அறிவித்தது இலங்கை அரசாங்கம் மேலும் ராஜாவுக்காக ஓர்  முத்திரை  வெளியிடப்பட்டதோடு ஆயிரம் ரூபாய் நோட்டிலும் ராஜாவின் படம் அச்சிடப்பட்டுள்ளது .  ராஜாவின் பூத உடல் பாடம் செய்யப்பட்டு தலதா மாளிகையில் நிறுவப்பட்டுள்ள ஒரு பிரத்தியேக  அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது .


பன்னிரெண்டாவது  கண்டி அரசு அரண்மனை ,  கண்டியில் உள்ள தலதா மாளிகையின் வடக்கில் அமைந்திருக்கிறது “ராயல் பேலஸ் ஆஃப் கண்டி” எனப்படும் அரண்மனை.  கண்டி ராஜ்ஜிய அரசர்களின் வசிப்பிடமாக இருந்த இந்த அரண்மனையில் கடைசியாக வசித்தவர் , அரசர் விக்ரமசிங்கன் ஆவார். .இவ்வரண்மனை வளாகமானது அரசு அரண்மனை , விருந்தாளிகள் மண்டபம் அந்தப்புரம் , ராணியின் குளிக்கும் குலம் உள்ளிட்டவைகளுடன் பௌத்த ஆலயமான தலதா மாளிகளையும் உள்ளடக்கியிருந்தது .


இந்த அரண்மனைக்கு அருகில் இருக்கும் விக்டோரியா கால கட்டிடத்தில் தற்போது கண்டி உயர் நீதிமன்றம் இயங்கி வருகிறது .


கண்டி சுற்றுலா இடங்கள் தொடர்பான ஒரு விரிவான பார்வையை இந்த கட்டுரையில் உங்களுக்கு வழங்கியுள்ளோம் .

No comments:

Post a Comment