இலங்கை பொருளாதார நெருக்கடியின் இறுதி கட்டங்கள்



 

2022
ஆம் ஆண்டு  இலங்கையர்கள் ஒவ்வொருவராலும் மறக்க முடியாத ஒரு ஆண்டு ஆகும் . பொருளாதார நெருக்கடியின் உச்சத்தை 2022 ஆம் ஆண்டு இலங்கை தொட்டு இருந்தது . 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் இலங்கையர்கள்  கடந்து வந்த இன்னல்கள் சொல்லில் அடங்காது.


பல வருட காலங்களாக இலங்கை செய்து வந்த பல மோசமான முடிவுகளின் விளைவாக இலங்கை பாரிய பொருளாதாரம் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. மேலும் சில ஆண்டுகள் கழித்து வர இருந்த குறித்த பொருளாதார நெருக்கடி ஆனது கொரோனா தாக்கம் காரணமாக  2022ம் ஆண்டே உச்சம் கொண்டது.


இலங்கை தன்னிடம் வைத்து இருந்த   வெளிநாட்டு அந்நிய செலாவணி கையிருப்பு காலியாக ஆரம்பித்ததை அடுத்து குறித்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக ஆரம்பிக்க தொடங்கியது.


அன்னிய செலாவணி கையிருப்பு குறைவடைந்து கொண்டே வந்து இறுதி கட்டத்தை அடைந்த பொழுது   இலங்கை பல   பொருட்களுக்கான இறக்குமதி தடையை விதித்தது . பால்மா , பழங்கள் , டைல்ஸ் , மின்சார பொருட்கள் உள்ளடங்களாக பல இவ்வாறு இறக்குமதி தடை விதிக்கப்பட்டது . குறிப்பாக வாகன இறக்குமதிக்கு தடையை விதிக்கப்பட்டது . இதன் காரணமாக  சந்தையில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்க தொடங்கியது .


சாதாரணமாக ரூபா 400 ஆக விற்பனை செய்யப்பட்ட  2”x2”  டைல்ஸ் ஒன்று ரூபா 2500 , 3000 ஐ கடந்தது . ஆயிரம் ரூபாவாக இருந்த ஐம்பது கிலோ சிமெந்து பை ரூபா 3400 வரை அதிகரித்தது . ஒவ்வொரு பொருட்களும் இரண்டு மூன்று விலை அதிகரித்தது . 190 ரூபாய் இருந்த டாலர் சரிதியாக அதிகரித்த தொடங்கியது அது 360 ரூபாய் வரை சென்றது .  டாலர் அதிகரிப்பின் காரணமாக பல பொருட்களின் விலை அதிகரிக்கத்தது .


இதற்கு மத்தியில் மின்சார உற்பத்திற்கு தேவையான மூல பொருட்களை கொள்வனவு செய்ய முடியாமால் மின்துண்டிப்பை செய்ய அரசு ஆரம்பித்தது . முதலில் ஒரு மணிநேரம் இரண்டு மணி நேரம் என ஆரம்பமான துண்டிப்பு ஒரு நாளில் எட்டு ஒன்பது மணி நேரங்கள் வரை அதிகரித்தது .


நாட்டில் ஒவ்வொரு பொருட்களுக்குமான கேள்வி  அதிகரிக்க தொடங்கினாலும்   அதற்கான நிரம்பலை இலங்கை அரசினால் வழங்க முடியாமல் போனது .இதன் பின்  பல இடங்களில் வரிசைகள் ஆரம்பமாக தொடங்கியது.


இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் பெறுமதி அதிகரிப்பு மற்றும் டொலர் பற்றாக்குறை போன்ற காரணிகளின்  ஒரு மோசமான விளைவாக பெட்ரோல் விலையை அதிகரிக்க இலங்கை அரசுக்கு நேரிட்டது . இருநூறு ரூபாய்க்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபா  500  வரை விலை அதிகரிப்பு செய்யப்பட்டது . மேலும் இரண்டாயிரங்களுக்கு குறைவாக இருந்த எரிவாயு சிலிண்டர் விலைக்கள் ஐந்தாயிரம் வரை அதிகரித்தது . 

 

பொருட்களின் விலைகள் எவ்வளவு அதிகரிக்கப்பட்டாலும் அப்பொருட்களை மக்களுக்கு  வழங்குவதில் இலங்கை அரசுக்கு பாரிய சிக்கல் ஏற்பட்டது . அதன் காரணமாக பல இடங்களில் பல வரிசைகள் ஆரம்பமாக தொடங்கியது . எரிபொருள் வரிசை , கேஸ் வரிசை , பால்மா வரிசை  மற்றும் மண்ணெண்ணெய் வரிசைகள் அவற்றில் பிரதானமாகும் .


 வரிசைகளில் பல மரணங்கள் பதிவாகத் தொடங்கின. எங்கு பார்த்தாலும் சண்டையும் ஆரவாரம் ஆர்ப்பாட்டம் என இலங்கை நாடு முழுவதும் ஒரு மயானமாக மாறத் தொடங்கியது.  பலர் நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்தனர் .  பாஸ்போர்ட் நிலையங்களில் ஆயிரக்கணக்கானோர் பாஸ்போர்ட்  பெற காத்திருந்தனர்  . வரிசைகள் நீண்டது பல நாட்கள் அங்கு வந்து பல காத்திருந்தனர் . வெளிநாடு செல்வோர் பாரிய அளவில் அதிகரித்தது . பலர் தொழிலுக்கும் பலர்  நிரந்திரமாக நாட்டை விட்டு செல்ல ஆரம்பித்தார்கள் . அது இன்று வரை தொடர்கிறது . அந்நாட்களில் இலங்கை ஒரு பற்றி எரியும் தீவாகவே முழுமையாக மாறியது .


மக்களின் கோபம் அரசாங்கம் மீது மாறத்தொடங்கியது . பல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற , கொழும்பு காலி முகத்திடலில் கோடா வீடு செல் என ஆர்ப்பாட்ட கிராமம் உருவாக்கப்பட்டது . இதன் பொது மக்களின் அமோக வரவேற்பு கிடைத்தது . இதன் உச்சம் ஜூன் மாதம் வந்தது .   மக்கள் கோட்டாபய ராஜபக்ச மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசுக்கு இராஜினாமா செய்யும் படி பல அழுத்தங்களை செய்ய ஆரம்பித்தனர் .


இது தொடர்பாக கலந்த ஆலோசிக்க கொழும்புக்கு கூடிய  ராஜபக்ச ஆதரவாளர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த காலி முகத்திடலை தாக்கினர் . அன்று கலவரம் வெடித்தது . இதன் காரணமாக பிரதமர் பதவியை மஹிந்த அன்று இரவு இராஜினாமா செய்தார் .  பதவி விலகி சில நாட்கள் சென்று பிரதமராக ரணில் விக்கிரமசிங்க ஜனாபதியினால் நியமனம் செய்யப்படுகிறார் . பாராளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு ஒருவர் பிரதமர் ஆகுவது இலங்கை வரலாற்றில் இதுவே முதற்தடவை ஆகும் .


பிரதமர் பதவி விலகி மாத்திரம் போதாது ஜனாதிபதியும்  இராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்தும் ஆர்பாட்டங்கள் நடைபெற , இறுதியாக ஜனாதிபதியை பதவி விலகக் கோரி  மக்கள் ஜூலை 9 கொழும்புக்கு படையெடுத்தனர் அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி  வெளிநாடு பயணமானார்  . பின்பு ஜூலை பதிமூன்றாம் திகதி  தான் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு அறிவித்தார். மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக கோட்டபாய நியமித்துள்ளதாகவும் அறிவிப்பு செய்தார் .


சில நாட்கள் கழித்து பாராளுமன்ற பெரும்பான்மையுடன் ரணில் விக்ரமசிங்க இலங்கை சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்தார் .

No comments:

Post a Comment