மன்னம்பிடிய பஸ் விபத்து , எச்சரித்த பதிவுகள்


 

நேற்று  இரவு ஜூலை 09ம் திகதி   மன்னம்பிட்டிய பிரதேசத்தில் இடம் பெற்ற பஸ் விபத்தில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் சிலர்  உயிருக்கு போராடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது கொடுத்த பயங்கர பஸ் விபத்தில் இதுவரையில் 41 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் .


பொலன்னறுவையில் இருந்து கிழக்கி நோக்கி பயணித்த சச்சின் எக்ஸ்பிரஸ் நேற்று இரவு 8 மணி அளவில் மன்னம்பிட்டிய பாலத்தை மோதிக்கொண்டு ஆற்றில் விழுந்து குறித்த பயங்கர விபத்து இடம்பெற்று இருந்தது.


குறித்த விபத்து நடந்து  தற்போது 24 மணி நேரங்களை கடந்து உள்ள நிலையில் , இன்னமும்  தண்ணீரில் மூழ்கியுள்ள உடல்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது .


விபத்தில் பஸ் சாரதி உயிர் தப்பியுள்ள நிலையில் அவர் தற்போது பொலிஸ் அதிகாரிகளினால்  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் . குறித்த பேருந்துக்கு அப்பதியில் பயணிகளை ஏற்றி செல்வதற்கான செல்வதற்கான பயணிகள் அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை என சில ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன.


விபத்துக்குள்ளான பஸ் மற்றும் விபத்து இடம்பெற்ற மன்னம்பட்டிய பாலம் தொடர்பாக இரண்டு வருடங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்ட  இரண்டு கருத்து பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது .


அந்த முதல் பதிவு விபத்துக்குள்ளான  பஸ் மற்றும் அதன் சாரதி தொடர்பாக வெளியிடப்பட்டிருந்தது .  அதில்  ,தான் தொடர்ந்து குறித்த பஸ் ஐ  அவதானித்து வருவதாகவும் ,அந்த பஸ் மிகவும் வேகமாக பாதையில் செல்வதாகவும் இது பல உயிர்களை காவு கொள்ள வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  மேலும் அந்த பஸ் எதிரில் வரும் வாகனங்களுக்கு இடம் கொடுக்காமல் முன்னே செல்வதாகவும் அவர்  தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார் .


 அத்தோடு அந்த பதிவை முடிக்காமல் ,விரைவாக குறித்த சாரதியையும் ஓட்டுனரையும் கண்டித்து பஸ்ஸை மெதுவாக செலுத்த சொல்லுமாறு, குறித்து பஸ் இன் உரிமையாளருக்கு அவர் அந்த பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார் . இந்த பதிவு நிரோஷாந்த் மகேந்திரன் என்பவரால் 2020 ஆம் ஆண்டு மார்ச்  மாதம் ஆறாம் திகதி வெளியிடப்பட்டுள்ளது .


அடுத்த பதிவில் குறித்த விபத்து இடம்பெற்ற மன்னம்பிட்டிய பாலம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.


குறித்த பாலத்தில் மழைக்காலங்களில் பாசி படர்ந்து பல பாதை மூடிப்படுவதாகவும் பின்பு  வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் குறித்து பாசிகள் அகற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் . முன்பு மன்னம்பிட்டிய  பாலத்துக்கு பாதுகாப்பு வேலிகள் இல்லாது இருந்த போது பல விபத்துக்கள் இடம்பெற்று பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் . விரைவாக  பாலத்தை பெரியதாக்கி தரும்படியும் , குறித்த பாலத்தின் ஒடுக்கம் காரணமாக பாரிய வாகன நெரிசல் ஏற்படுவதாகவும் அவசரமாக வரும் ஆம்புலன்ஸ் வண்டி ஒன்றுக்கும் விரைவாக அதனை கடக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்  .


இவ்வாறு குறித்த பயங்கர விபத்து தொடர்பாக பலரின் அலட்சியமான போக்குகள்  பல கோணங்களில் சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் வெளியாகி வருகிறன .


இலங்கையில் தினமும் நடக்கும் உயிரிழப்புக்களில் அதிகமான உயிரிழப்புக்கள் வீதி விபத்துகளினால் ஏற்படுகின்றது . இவ்வருடத்தின் கடந்த நான்கு மாதங்களில் மாத்திரம் வீதி விபத்துக்களில் 709 பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர் அதில் 220 மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர் .  கடுமையான பாதை சட்டங்கள் இல்லாமை வாகன கோளாறுகள் மற்றும் சாரதியின் பிழைகளினாலே அனேகமான வீதி விபத்துக்கள்  இலங்கையில் இடம் பெறுவதற்கு காரணமாக அமைகிறது .


கடந்த 24 மணி  (ஜூலை 9  இருந்து ஜூலை 10  நண்பகல் வரை )  நேரத்தில் மாத்திரம் இலங்கையில் ஐந்து  மோசமான பஸ் விபத்துக்கள் பதிவாகியுள்ளது . நேற்று இரவு மன்னம்பிடியவில் இடம் பெற்ற கோர பஸ் விபத்தில் பதினோரு  உயிரிழப்புக்களும்  , நாற்பதுக்கும் அதிகமான காயமும் கொண்டவர்களும் பதிவாகியது . மேலும் நேற்று நண்பகல் தலவாக்கலையில் பஸ் ஒன்று 50 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஒன்று பதிவாகி இருந்தது . அதில் பயணித்த 26 காயமடைந்துள்ளனர் .அதிஷ்டவசமாக அந்த விபத்தில் எவ்வித உயிரிழப்புக்களும் பதிவாகவில்லை . இன்று கொழும்பு குருநாகல் வீதி அபன்போல பிரதேசத்தில் கூரகல பகுதிற்கு யாத்திரை மேற்கொண்டு திரும்பிக்கொண்டு இருந்த பஸ் இடம்பெற்ற  பயங்கர விபத்தில் இரண்டு உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகி இருந்தது . 29 பேர் குறித்த விபத்தில் காயமடைந்துள்ளனர் .


மேலும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று கோட்டாவை அதிவேக நெடுஞ்சாலை வாயிலில் மோதி விபத்து ஒன்று பதிவாகியுள்ளது . குறித்த விபத்தில் பஸ் மாத்திரம் சேதங்களுக்கு உள்ளாகி இருந்தது . அதேபோல் யாத்திரை சென்றவர்களை அழைத்து சென்ற மேலும் ஒரு பஸ் கடுகிதுல பகுதியில் சாரதியின் கவனயீனம் காரணமாக பாதையில் புரண்டுள்ளது.


இவ்வாறு  பல பஸ் விபத்துக்கள் கடந்த நாளில் பதிவாகியுள்ளது . காலம் தாமதிக்காமல் அரசு இதுபோன்ற விபத்துக்களை  குறைப்பதற்கு விரைவாக தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் . இல்லாவிடின  இதுபோன்று பல அநியாயமான உயிர்களை எதிர்காலத்தில் இழக்க நேரிடும் .

No comments:

Post a Comment