திருகோணமலை துறைமுகத்தின் முக்கியத்துவம்


 உலக பிரசித்தி பெற்ற இலங்கையின் இயற்கை சொத்தான  திருகோணமலை  துறைமுகத்தின் முக்கியத்துவம் தொடர்பாக பார்ப்போம் . திருகோணமலை துறைமுகம்  கடல் துறைமுகமாக திருகோணமலை விரிகுடாவில் அமைந்துள்ளது .  இத்துறைமுகம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாக ஆரம்பகாலத்தில் இருந்து காணப்பட்டு வருகின்றது.

 

 இதன் நுழைவாயில் உள்ள கால்வாயானது 500 மீட்டர் அகலத்தினை கொண்டுள்ளது .இது உலகிலேயே மிக ஆழமான கடல் துறைமுகமாக காணப்படுகின்றது .துறைமுகத்தில் 24 மணித்தியாலங்களும் வேலை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நாட்களும் இத்துறை முகம் திறந்திருக்கும் .இத்துறைமுகத்திலிருந்து 5 பெரும் தீவுகள் ப்ரிமா தொழிற்சாலை , டோக்யோ சிமெந்து தொழிற்சாலை அஸ்ரப் குவாரி ஆகியவற்றை பார்க்க முடியும் .


 

இத்துறைமுகத்திற்கு இரண்டு நுழைவாயில்கள் காணப்படுகின்றன . சுற்றுலா பயணிகள் கடற்படையின் கப்பல்கள் மூலம் செல்ல முடியும் த்துடன் இந்த பகுதியில் அதிக அளவிலான மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள் . இத் துறைமுகத்தின் இயங்கு திறனை அவதானிக்கும் இடத்தில் சுற்றுலாப் பயணிகளாக இருந்தாலும் வெளிநாட்டு பயணிகளாக இருந்தாலும்  திங்கள் தொடக்கம் வெள்ளி வரை காலை 9 மணி முதல் 2 மணி வரையும் சனி மற்றும் ஞாயிறு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் இத்துறைமுகமானது திறந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



 இங்கு இரவு நேரங்களில் கப்பல் நகவுகள் நடைபெறுகின்றது .இதற்காக இலத்திரனியல் கருவிகளை  ஜப்பான் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது . சர்வதேச கடல்களில் இருந்து திருகோணமலை துறைமுகத்தை அண்மித்து பெருமளவிலான கப்பல்கள் பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  இத்துறை முகம் பொருளாதார ரீதியாகவும் , சுற்றுலா ரீதியாகவும் , பாதுகாப்பு ரீதியாகவும்  முக்கியமான ஒரு துறைமுகமாகவும் , ஏனைய நாடுகளின் மையப் புள்ளியில் இத்துறை முகம் அமைந்துள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.


 

இத் திருகோணமலை துறைமுகத்தின் மூலம் அதிகளவிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக காங்கேசன்துறை  கொழும்பு ஆகிய இரு துறைமுகங்களுக்கு  இடையில் ஒரு மைல் கல்லாக  செயல்பட்டு வருகின்றது . எனினும் கடந்த யுத்த காலங்களில் போது A9 பிரதான போக்குவரத்து பாதை துண்டிக்கப்பட்டது . இதனால் கப்பல் சேவை விஸ்தரிக்கபட்டது .


 

கப்பலின் மூலம் காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரை பயண சேவைகள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி சேவைகள் நடைபெற்று வந்தன .இதன் காரணமாக அக்காலங்களில் அதிகளவிலான வருமானத்தை இந்த துறைமுகம் பெற்றுக்கொண்டது .



இன்று வரை திருகோணமலை துறைமுகம் சிறந்த வரலாற்றுக்கு உட்பட்ட துறைமுகமாகவும்   ஏனைய நாடுகளின் கண்காணிப்பில் உள்ள துறைமுகமாகவும் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாக உள்ளது. இத் துறைமுகம் ஒரு ஆழ்கடல் துறைமுகம் ஆகையால் இங்கு நீர்மூழ்கி கப்பல்கள் முதல் சாதாரண கப்பல்கள் வரை பாதுகாப்பாக இருக்க முடியும் . மற்றும் எரிபொருள் கொள்வனவு மற்றும் விற்பனைக்கு ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை சிறந்த தளமாக இத்துறைமுகமானது காணப்படுகின்றது.


 

 இன்று இத் துறைமுகத்திற்கு பல நாடுகள் போட்டி போடுகின்ற தன்மை காணப்படுகின்றது . குறிப்பாக அமெரிக்கா , ஜப்பான் , இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் திருகோணமலை துறைமுகத்தை தமது கட்டுபாட்டுக்குள்ளும் தம் வசத்திற்கும் கீழும் வைத்துக்கொள்ள முற்படுகின்றனர் .  ஏனெனில் திருகோணமலை துறைமுகமானது  சர்வதேச கப்பல் எல்லை பாதையில் காணப்படுவதால் அனைத்து நாடுகளின் கவனித்தை ஈர்த்த  ஒரு துறைமுகமாக காணப்படுகின்றது.


 

 இருப்பினும் கூட இன்றுவரை அந்த விடயம் தொடர்பாக எட்டா கனியாகவே எல்லா நாடுகளுக்கும் காணப்படுகின்றது .இவ்வாறு இலங்கையின் அரிய பொக்கிஷமாகவும் அதிக லாபத்தினை ஈட்டி தரக்கூடிய ஒரு இடமாகவும் இத்திருகோணமலை துறைமுகமானது காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இயற்கை துறைமுகமாக திருகோணமலை துறைமுகம் முக்கியத்துவம் பெறுகிறது 

No comments:

Post a Comment