இலங்கையில் தொடர்ந்து நான்காவது முறையாகவும்
நடத்தப்படும் லங்கா பிரிமியர் லீக் அதாவது எல்.பி.எல் தொடர் நேற்று அதாவது 2023 ஜூலை 30-ஆம் திகதி வெகு
விமர்சையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது .
இதற்கு முன் எல் பி எல் போட்டிகள் 2020 , 2021 மற்றும் 2022 என மூன்று முறை
நடத்தப்பட்டு இருந்தாலும் இம்முறை 2023 நடைபெறும் எல்.பி.எல் போட்டியானது சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டு சர்வதேச தரத்தில் நடைபெறும் முதல்
முறை இதுவாகும் .
உலகம் முடங்கி இருத்த 2021ம் ஆண்டு பல முறை எல்.பி.எல். தொடர் பலமுறை
தள்ளிச்சென்று பல நாடுகளுக்கு முன்னுதாரணமாக சிறப்பாக பார்வையாளர்கள் இன்றி
குறித்த தொடரை இலங்கை நடத்தி முடிந்தது .
இம்முறை எல் பி எல் போட்டிகள் சிறப்பாக ஒழுங்கு
செய்யப்பட்டிருந்தாலும் நேற்று ஆரம்ப விழாவின் போது தேசிய கீதத்தின் சில வரிகளை
மாற்றி பாடியது தொடர்பாக தற்போது பல சர்ச்சைகள் எழுந்துள்ளது . சமூக வலைத்தளங்களில்
குறித்த பாடலை பாடலை பாடிய பாடகி மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை நக்கல் நையாண்டி
களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது . தேசிய கீதத்தின் வரிகளை மாற்றம்
செய்வது குற்றம் எனவும் , இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும்
தெரிவிக்கபடுகிறது . இருப்பினும் தேசிய கீதத்தை மேற்கத்திய வடிவில் பாட முயன்றதால்
குறித்த பிழையான உச்சரிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் சிலர் குறித்த பாடகிக்காக
கருத்தும் தெரிவித்து வருகின்றனர் .
இறுதியாக நடைபெற்று முடிந்த மூன்று எல்.பி.எல் சீசன்களிலும் டிராப்ட் முறையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு
போட்டிகள் நடத்தப்பட்டது . இருப்பினும் இம்முறை சர்வதேச முறையில் வீரர்களுக்கான
ஏலம் நடத்தப்பட்டு அதன் மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர் .
சென்ற வருடம் நான்கு அணிகளுடன் ஆரம்பமான இத்தொடர்
இம்முறை ஐந்து அணிகளை கொண்டு விளையாட உள்ளது . வீரர்களுக்கான ஏல முறை
ஆரம்பிப்பதற்கு முன்பே சில பிரசித்தி பெற்ற வீரர்கள் , குறித்த அணிகளில்
உடன்படிக்கை செய்து இணைத்துக்கொள்ளப்பட்டனர் . இவர்களில் உள்நாட்டு மற்றும்
வெளிநாட்டு வீரர்களும் உள்ளடங்குகின்றனர் .
இம்முறை எல்.பி.எல் போட்டி தொடரில் கொழும்பு
மற்றும் மேல் மாகாணத்தை உள்ளடக்கி கொழும்பு ஸ்ட்ரைகர்ஸ் அணியினரும் , தம்புள்ளை மட்டும் மத்திய மாகாணத்தை
உள்ளடக்கி தம்புள்ள அவுரா அணியினரும் , காலி மற்றும் தென்மாகாணத்தை உள்ளடக்கி காலி டைட்டன்ஸ் அணியினரும் , யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மாகாணத்தை உள்ளடக்கி
ஜஃப்னா கிங்ஸ் அணியினரும் , இறுதியாக கண்டி
மற்றும் மத்திய மாகாணத்தை உள்ளடக்கி பி லவ் கண்டி அணியினரும் இம்முறை எல் பி எல் தொடரில் விளையாட உள்ளனர் .
இம்முறை எல்.பி.எல் ஏலத்தில் ஒவ்வொரு
அணியினருக்கும் தலா 5 லட்சம் அமெரிக்க
டொலர்கள் தமது அணிக்காக வீரர்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளது . இதன்
இலங்கை ரூபா பெறுமதி சுமார் அதாவது இலங்கையில் சாப்பிடுவதில்15 கோடிகளுக்கும் அதிகமாகும் .
2023 எல்.பி.எல் வீரர்கள் ஏல விற்பனைவில் சுமார் 500 வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 140 வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை
கிரிக்கெட் வாரியம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது . மேலும் இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்
அணியினரின் ஓய்வு பெற்ற பிரசித்த வீரர் சுரேஷ் ரெய்னா எல் பி எல் போட்டிகளில் விளையாட
உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பை இது
மேலும் அதிகரித்து இருந்தது . இருப்பினும் குறித்த உத்தியோகப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகி
சில நாட்களின் பின்பு அவர் குறித்த
தொடரில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது .
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணியின் பிரபல
வீரர்கள் மற்றும் தென்னாப்பிரிக்கா அணியின் டேவிட் மில்லர் போன்றோர் இத்தொடரில் விளையாடுவது
உறுதியானது .
எல் பி எல் வீரர்கள் ஏலத்தில் 92 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு டில்ஷான் மதுசங்கவை ஜப்னா
கிங்ஸ் அணியினர் கொள்வனவு செய்தனர் . இவரே
எல்.பி.எல் வரலாற்றில் அதிக தொகைகளுக்கு விற்பனை செய்யப்பட்ட வீரர் ஆவார் .இதன் இலங்கை
பெறுமதி 2.7 கோடிகளை விடவும் அதிகமாகும் . அதற்கு அடுத்தபடியாக சரித் அசலாங்க ஜப்னா கிங்ஸ்
அணியினரால் 80,000 அமெரிக்க
டாலர்களுக்கு விற்பனையாகி இருந்தார் .
கொழும்பு ஸ்ட்ரைகர்ஸ் அணியினரை நிரோஷன்
திக்வெல்ல தலைவராக வழிநடத்தும் வாய்ப்பை
பெற்றுக்கொண்டுள்ளார் . இந்த அணியில் பாபர் அசாம் , இந்திய எல்.பி.எல் போட்டிகளில்
சென்னை சுப்பர் அணியில் விளையாடிய பிரபலம் ஆன மதீச பத்திரன மற்றும் சாமிக
கருணாரத்ன போன்றோர் உள்ளடங்குகின்றனர் .
தம்புள்ள அவுரா அணியை குசல் மென்டிஸ் வழி நடத்த உள்ளார் . இந்த அணியில் மதிவ் வேட் , குசல்
பெரேரா மற்றும் தனஞ்சய டி சில்வா போன்ற வீரர்கள் உள்ளடங்குகின்றனர் .
காலி டைடன்ஸ் அணியின் தலைவராக இலங்கை ஒருநாள் மற்றும் டீ 20 அணியின் தலைவர் தசுன் சானக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
. இந்த அணியில் சகிப் ,சம்சி ,பானுக ராஜபக்ஷ
போன்ற பிரபல வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் .
மூன்று எல்.பி.எல் தொடர்களையும் வென்று அசைக்க
முடியாமல் இருக்கும் ஜப்னா கிங்ஸ் அணியை வழமை போல் திசர பெரேரா வழிநடத்த உள்ளார். இந்த அணியில் டேவிட் மில்லர் ,குர்பாஸ் ,மகீஸ்
தீக்ஷன ,அசலங்க ஷோயப் மலிக் போன்ற பல சிறந்த டீ20 வீரர்கள் உள்ளடங்குகின்றனர் .
இறுதியாக பி லவ் கண்டி அணியினரை வழி நடத்தும் வாய்ப்பு
வணிது ஹசரங்கவுக்கு கிடைத்துள்ளது . முஜீபுர் ரஹ்மான் , அஞ்சேலோ மதீவ்ஸ் , சமீர
,உதான மற்றும் சந்திமல் போன்ற வீரர்கள் இந்த அணியில் விளையாடும் வாய்ப்பை இம்முறை
பெற்றுக்கொண்டுள்ளனர் .
மொத்தமாக 24 போட்டிகளை
இம்முறை எல்.பி.எல் தொடர் கண்டி பல்லேகல மற்றும் கொழும்பு பிரேமதாச மைதானங்களில்
நடைபெறவுள்ளது . முதல் சுற்றில் ஒவ்வொரு அணியினரும் மற்ற அணியினரை இரு முறை எதிர்த்து
விளையாடும் . அதில் முதல் 4 இடங்களை பிடிக்கும்
அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் .
சர்வதேச தரத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள
இம்முறை தொடரானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வலையமைப்பின் ஊடாக இந்தியா மற்றும் உலக
நாடுகளில் ஒளிபரப்பு செய்யப்படும் .
No comments:
Post a Comment