புவியில் பருவ காலங்கள் தோன்றுவது ஏன் ?


 

ஏப்ரல் மே  மாதங்களில் வெயில் காலமும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் குளிர்காலமும் ஏன் இப்படி உருவாகிறது.  புவியில் பருவ காலங்கள் தோன்றுவது ஏன்? எப்படி உருவாகிறது தொடர்பாகவும் தெரிந்து கொள்வோம்.



பொதுவாகவே  சூரியனை பூமி ஒரு நீள் வெட்ட பாதையில் அதாவது ஓவல் வடிவில்  சுற்றுவதனால் ,சூரியனுக்கு பூமிக்கும் இடைவெளி மாறுபடும் .நாம் வாழும் பூமியானது சூரியனை ஒரு 23.5° சாய்வாக சுற்றிக்கொண்டு இருக்கிறது . பூமியை மேலிருந்து கீழாக  பாதியாக  பிரித்தால் ,  அதன் மேல் பகுதி வடக்கு அரைக்கோளம் என்றும் அதன் கீழ் பகுதி தெற்கு அரைக்கோளம் என்றும் அழைக்கப்படும் .


 

எப்படி சூரியனை பூமி  சாய்வா சுற்றிக்கொண்டு இருக்கும் பொழுது  சூரிய ஒளி அதிகமா படும் இடத்துல் , அப்பகுதியில் கோடைகாலமாகவும் சூரிய ஒளி அதிகமா படாத இடத்தில் , அங்க குளிர்காலமாகவும் காணப்படுகிறது . இதனால  ஆசிய நாடுகளான  இந்தியா இலங்கை போன்ற இடங்களில்   ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடைகாலமா  இருக்கும்போது ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அங்கு குளிர்காலமாக மாறுகிறது . இதன் காரணமாகவே குளிர் காலங்களில் மேற்கத்திய நாட்டு மக்கள் ஆசிய நாடுகளுக்கு தமது விடுமுறையை கழிக்க வருகிறார்கள் . புவியில் பருவ காலங்கள் தோன்றுவது இதன் காரணமாக ஆகும் .  


 

மேலும் சூரிய ஒளி சாதாரணமாக படும் இடங்களில்  ஸ்ப்ரிங் சீசன் அதாவது வசந்த காலம் மற்றும் இலை  உதிர் காலமும் ஏற்படுகிறது . ஒரு பருவ காலங்களிலும் செடி வகைகள் உயிரினங்கள் எல்லாம் தன்னை தானே மாற்றிக்கொள்ளும் .  அதாவது ஒரு குறிப்பிட்ட பருவ காலங்களில்  மாத்திரம் தான் சில வகை காய்கறிகள் பழங்கள் கிடைக்கும் . 



இவ்வாறுதான்  பூமியின் மேல சூரிய ஒளி படுகின்ற  அளவை  வைத்தே   புவியில் பருவ காலங்கள் தோன்றுவது  இடம் பெறுகிறது ..

 

No comments:

Post a Comment