கடாரம் கொண்டான் என்றால் என்ன ?


 

கடாரம் கொண்டான் என்றால் என்ன ? இந்த கட்டுரை மூலம் அதற்கான விடை கிடைக்கும் .


 

பட்டுப்பாதை வர்த்தகத்தில் ஸ்ரீ விஜய் அரசின் பங்கு முக்கியமானதாய் இருந்தது .காரணம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி செல்லும் அனைத்து கப்பல்களும் ஸ்ரீ விஜய் அரசு இருந்த மலேசியா சுமத்ரா தீவுகளுக்கு இடைப்பட்ட அலைகள் குறைந்த பாதுகாப்பான கடல் பகுதியில் பயணிப்பதே எளிதானது. 



 இல்லையேல் இந்திய கடலில் பொங்கி வரும் அலைகளே மரக்கலங்களை உடைத்து தள்ளிவிடும். ஸ்ரீ விஜய் அரசுக்கும் சோழ பேரரசுக்கும் இராஜராஜனின் காலத்திற்கு முன்பிருந்தே நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. எனினும் சோழர்கள் வணிகத்தில் உயர்ந்து வருவதை சங்கு ராமன் விரும்பவில்லை. சீனப் பேரரசுடன் நடக்கும் ஒட்டுமொத்த வர்த்தகம் தன் கட்டுப்பாட்டிலேயே நடக்க வேண்டும் என்ற திட்டத்தில் இருந்தான் அவன்.


 

 மலக்காக நேரணையை கடந்து செல்லும் அனைத்து படகுகளும் சங்கராமனுக்கு சுங்கம் கட்டியாக வேண்டும் .இல்லையேல் அவனின் கூலிப்படைகளால் கொள்ளையடிக்கப்படும். சுங்கம் கட்டினாலும், சோழ வணிகர்களை சீனத்துடன் நேரடி வணிகம் செய்ய அவன் அனுமதிக்கவில்லை. சோழ வணிக கப்பல்கள் தொடர்ந்து சேதாரத்தை சந்தித்து வந்தன. தம் பொருட்களையும்  உடமைகளையும் இழந்த வணிகர்கள் ராஜேந்திரனிடம் கண்ணீருடன் முறையிட்டுக் கொண்டிருந்தனர்.


 

 ஸ்ரீ விஜய் அரசனின் கொட்டத்தை அடக்க முடிவு செய்தான் கங்கை கொண்டவன் ஆன ராஜேந்திரன் .சோழ தேசத்தின் பெரும் கப்பற்படை தளபதிகளும் அமைச்சர்களும் ராஜேந்திரனின் கங்கைகொண்ட சோழபுரம் தலைநகருக்கு விரைந்தனர் .



அமைச்சரவை கூட்டத்தில் தன் எண்ணத்தை ராஜேந்திரன் .நாகப்பட்டினத்தில் இருந்து சுமத்ரா செல்ல இரண்டு மாதத்திற்கு மேல் காலமாகும் .குறைந்தபட்சம் 40 ஆயிரம் வீரர்கள் தேவைப்படும். வீரர்களுக்கான உணவு ,ஆயுதங்கள் அவற்றுக்கும் மேலாக தண்ணீரையும் கப்பலில் தான் எடுத்துச் செல்ல வேண்டும் .நக்க பாரத் தீவுகள் வரை இளைப்பாற சிறு தீவு கூட நடுவில் கிடையாது ..இதனைச் சொல்லி இலங்கை மாலை தீவுகள் அது அவ்வளவு எளிதல்ல.சங்கராமனின் கப்பல் படையும் வலிமையானது என தயங்கினர் தளபதிகள் .


 

முடியாததை முடித்துக் காட்டுபவன் தானே பெருவீரன் . ராஜேந்திரன் பெருவீரன் அல்லவா, வினை வலிமை தன் வலிமை மாற்றான் வலிமை பார்த்து செயல்பட வேண்டும் எனும் வள்ளுவனின் வாக்கை அறிந்த ராஜேந்திரன் திட்டமிடுதலில் இறங்கினான் .அப்போது உலகில் பெரும் கப்பல் கட்டுபவர்களாக இருந்த அரபு கப்பற்படை பொறியாளர்கள் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களுடன் இணைந்து தமிழக கப்பல் பொறியாளர்கள் நாவாய்களை கட்ட ஆரம்பித்தனர் .நாகை துறைமுகம் முழுவதும் கப்பல்களின் பாய் மரங்கள் வானுயர்ந்து நின்றன .அவற்றின் மேல் கொடி பட்டொலி வீசு பறந்து கொண்டிருந்தது .


 

குறிப்பிட்ட நாளில் சோழ படைகள் நாகையிலிருந்து சுவர்ண தீபமான சுமத்ரா நோக்கி புறப்பட்டன.  பாய்மரங்கள் கடல் அலைகளுக்கு போட்டியிட்டு ஆடிக் கொண்டிருந்தன. மீன்களோடு போட்டி போட்டு கடல் அலைகளை கிழித்துக்கொண்டு பாய்ந்தன சோழநாவாய்கள் . கடலின் மறுபுறம் சோழப்படை தயாராகிக் கொண்டிருப்பதை அறிந்திருந்தான் சங்கராமன், சோழரின் படைவளிமை அவனுக்கு தெரியும் .



புலி நிலத்தில் வேண்டும் என்றால் வெல்லலாம், கடலில் நான் தான் புலி என்ற மமதையில் இருந்தான் அவன். 2000 கிலோ மீட்டர்கள் கடலில் பயணித்து வரும் சோழ வீரர்கள் சோர்ந்து போய் இருப்பர் எளிதில் வீழ்த்தி விடலாம் என காத்திருந்தான் . சோழர்கள் வரும் திசை நோக்கி மலையே தீபகற்பத்தின் கடாரத்திற்கும் வடக்கு சுமத்ரா தீவின் லவூருக்கும் இடையில் தன் மொத்த கப்பற்படையும் குவித்திருந்தான் ராமன். நாட்கள் சென்றன, ஆனால் சோழப் படை வரவில்லை. ஒருவேளை கடல் புயல்களில் சிக்கி சோழப்படை அழிந்ததோ அல்லது நம் படை வலிமை அறிந்து திரும்பி விட்டார்களோ என உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருந்தான் சங்குராமன் .



 சில மணி நேரங்களில் அவன் சிரிப்பு மாறப் போகிறது, தலைநகர் பொலாம்பில் இருந்து ஒரு அவசர செய்தி ஸ்ரீ விஜயனுக்கு வந்தது. சோழப் படைகள் தெற்கு சுமத்ராவில் சுண்டநேரனை வழியாக நுழைந்து, தலைநகர் அருகில் வந்துவிட்டது என்பதுதான் அது .அதிர்ந்து போனார் அது சாத்தியமே இல்லையே ஒருவேளை நம்மை திசை திருப்ப நடக்கும் சூழ்ச்சியோ என புலம்பினான். ஆனால் அது சூழ்ச்சியும் அல்ல திசைதிருப்பும் செயலும் அல்ல .சோழரின் நுணுக்கமான திட்டம் வெற்றி பெற்று கொண்டிருந்தது.


 

 சுமத்ரா தீவிற்கும் தெற்காக இருந்த இந்திய கடல் பகுதி ஒரு பனைமர அளவு கொந்தளிக்கும் அலைகள் நிறைந்த பகுதி .மரத்தால் செய்யப்பட்ட கப்பல்களை அவை நொறுக்கி தள்ளிவிடும். அதனால் கப்பல்கள் எதுவும் அதில் செல்லாது .இதனால் சங்குராமனும் அங்கு படைகளை நிறுத்தவில்லை .சங்கு ராமன் இதைத்தான் செய்வான் என கனத்திருந்த ராஜேந்திரன் படைகள் முன் படையை மட்டும் வடக்கு சுமத்ராவிற்கு வருவது போல் நகர்த்தி போக்கு காட்டியது ஆனால் உண்மையான படை தீவினை சுற்றி ஆழ்கடலுக்கு சென்றது .


 

அங்கு இருக்கும் உயர்ந்த அலைகளை கணக்கிட்டு வலிமையான கப்பல் கட்டமைப்பை வடிவமைத்து இருந்தனர் தமிழக கப்பல் பொறியியலாளர்கள் .முகரி வலிமையான அலைகளில் விழித்துக் கொண்டு பாய்ந்தது . சுமத்திரா தீவினை சுற்றி சுந்தா நீர் இணையின் வழியாக நேரடியாக ஸ்ரீ விஜய அரசின் இதய பகுதியான தலை தலைநகரை தாக்கியது சோழர் படை . ஒட்டுமொத்த பலத்தையும் வடக்கில் குவித்திருந்த சங்குராமன் அதிர்ச்சியில் உறைந்தான்.


 

பளைம்பாம் எளிதில் சோழர்களிடம் வீழ்ந்தது .  சங்கு ராமனின் அரண்மனை தீக்கிரையாக்கப்பட்டது. அரசனின் தோரண வாயிலை வெற்றியின் சின்னமாக பெயர் த்தி எடுத்தனர் சோழ வீரர்கள் . மொத்த படையையும் தெற்கு நோக்கி திரும்பி , விரைந்தான் ஸ்ரீ விஜய் அரசன் . ஆனால் ஏற்கனவே தமிழக மாலுமிகள்  கணித்திருந்தபடி தெற்கிலிருந்து வடக்காக வருடம் மழைக்காற்று வீசத் துவங்கியது .சோழப் படைகள் எளிதாக தெற்கில் இருந்து வடக்காக விரைந்து கொண்டிருந்தன.


 

 அதே நேரத்தில் சங்கு ராமனின் கப்பல்களுக்கும் ஆணவத்திற்கும் பின்னடைவு .பலம் பாங்கை பிடித்த சோழப்படை அடுத்தடுத்து ஸ்ரீ விஜய நகரங்களான மலையூர், டுமாசிக் ,பண்ணை ஆகியவற்றை பிடித்தன .வடக்கிலிருந்து சிறிய படை சோழ அரசன்  லம்முரி ,கடாரம் கொண்டான் . இப்போது ஸ்ரீ விஜயனின் படை இருபுறம் இருக்கும் சோழப் படைகளுக்கு நடுவில் சிக்கிக் கொண்டது .இரண்டு புலிகளுக்கு நடுவில் சிக்கிய இரை போல ஸ்ரீ விஜயனின் படைகள் சிதரின . சோழப் படைகள் ஸ்ரீ விஜயனின் படைகளை நிர்மூலம் செய்தன.


 

 கீழே கடலின் அரசன் நான் தான் என ராமனுக்கு புரிய வைத்தான் ராஜேந்திரன் .அப்போது தன் தவறை உணர்ந்து இருப்பான் சங்கராமன். சோழ படையெடுப்பினால் தெற்காசியா முழுவதும் தமிழர்களின் கை வணிகத்தில் ஓங்கியது . தமிழர்களை சீண்டிப் பார்க்க எவருக்கும் துணிவு வரவில்லை. அடுத்த அரை நூற்றாண்டிற்கும் உலகத்தின் தலைசிறந்த வணிகர்களாக தமிழர்கள் இருந்தனர். சீன தேசத்தில் உள்ள தமிழ் கல்வெட்டுக்கள் இதை நமக்கு உணர்த்துகின்றன .


 

போரின் முடிவில் ஸ்ரீ  விஜய் அரசன் சங்குராம விஜய தூங்கவர்மன் கைது செய்யப்பட்டார். அவனுடைய அனைத்து நகரங்களும் அழிக்கப்பட்டு இருந்தது. சோழர்களின் கீழ் ஸ்ரீவிஜிய அரசாங்கம் முழுமையாக வந்திருந்ததுடன் , ஸ்ரீ விஜய அரசாங்கத்தில் சைலேந்திர வம்சமும் முடிவுக்கு வந்தது.



 அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு இந்தோனேசியா ஜாவா பகுதிகளில் யார் தலைமைக்கு வரவேண்டும் ,யார் ஆட்சிக்கு வர வேண்டும் , யார் வணிகம் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்தவர்கள் சோழப் பேரரசர்கள் தான்.  தளபதிகளின் திட்டம் ,மாலுமிகளின் திறமை ,போர் வீரர்களின் துணிச்சல், தமிழ் பொறியாளர்களின் நுட்பம் ஆகிய எல்லாவற்றையும் கடந்து சரியான திட்டமிடுதல் உடன் தகுந்த காலம் வரை பொறுத்து நினைத்ததை முடிக்க வேண்டும் எனும் ராஜேந்திரனின் உறுதியே நம்மை வியக்க வைக்கிறது.


 

கடாரம் கொண்டான் என்பதற்கான விளக்கத்தை தற்போது பெற்றுக்கொண்டிருப்பீர்கள் .சமூக வலைதளங்களில் பெறப்பட்ட தகவல்களை தொகுத்து வழங்கியுள்ளோம்.

No comments:

Post a Comment