உலகெங்கிலும்
உள்ள தமிழ் மக்கள் கொண்டாடும் நகரமான யாழ்பாணம் எங்கே அமைந்துள்ளது ? இலங்கையில்
உள்ள ஒரு மாவட்டம்.யாழ்ப்பாணம். வரைபடத்தில் இலங்கையின் தலையில் கிரீடம் போல
தென்னிந்தியாவின் பக்கமாக அமைந்திருக்கும் ஒரு தீவு யாழ்ப்பாணம் . இதற்கு
அருகிலும் அழகிய கூட்டத்தீவுகள் காணப்படுகின்ற மொத்தத்தில் இவை யாழ்ப்பாணத்துக்கு
ஒரு இனிய சுற்றுலா சூழலை கொடுக்கின்றது .
யாழ்ப்பாணத்தில்
பயணிகள் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் . கசூரினா கடற்கரை , இந்த கடற்கரை
கண்கவர் வனப்புமிக்க கடற்கரை ஆகும். வெளிநாட்டினர் உட்பட ஆயிரக்கணக்கில் சுற்றுலா
பயணிகள் வந்து செல்கின்றனர் .இதை யாழ்ப்பாணத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. ஒரு அழகிய கடற்கரையில்
என்னவெல்லாம் இருக்கும் எப்படியெல்லாம் மனதை ஈர்க்கும் என்பதை விவரிக்க தேவையில்லை.
ஒருமுறை சென்று நேரில் பார்த்தால் தான் கசுரினா கடற்கரையின் அழகை புரிந்துகொல்லம்
முடியும் .
நல்லூரு
கந்தசாமி கோவில் , உலகப் புகழ் பெற்ற ஒரு சிறப்புமிக்க ஆலயம் எதுவென்றால் அது
நல்லூர் கந்தசாமி கோவில். யாழ்ப்பாணத்தில் இந்து முருகன் கோயில் பலம் பெருமையானது
உலகப் புகழ் பெற்ற ஒரு சிறப்புமிக்க ஆலயம். இந்த கோயில்களின் சிறப்பு என்னவென்றால்
பத்தாம் நூற்றாண்டில் சோழ அரசியான செம்பியன் மகாதேவி நல்லூர் தேவியின் சிலையை
அளித்துள்ளார். இந்த சிலையை இன்னும் அங்கு போற்றிப் பாதுகாப்பதோடு அந்த திருத்தலம்
இலங்கை தமிழர்களின் முக்கிய புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்குகின்றன .
நைனா தீவி காகபூசணி கோவில் ,யாழ் மாவட்டத்தில் நைனா தீவு என்ற ஒரு சிறப்பு பகுதி உள்ளது . அங்கு அமைத்திருக்கும் பழமையான நாகா பூசணி அம்மன் திருத்தலமும் முக்கியமானது. ஒன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த ஆதிசங்கர் கடல் கடந்து இந்த கோயிலுக்கு வந்ததாக ஆதாரங்கள் இன்றும் உள்ளன .
தமிழின்
ஐம்பெரும் காப்பியங்களான மணிமேகலை , குண்டலகேசி நூல்களிலும் இந்த கோயிலை பற்றிய
தகவல் இடம்பெற்றுள்ளது ஆச்சரியம். இந்த கோயில் இலங்கை தமிழர்களுக்கு புனித தலங்கள்
ஒன்றாக விளங்குகின்றது. இதற்கு கொண்டாடப்படும் ஆனி மாதம் உற்சவ திருவிழாவில் ஒரு
லட்சம் அளவிலான பக்தர்கள் கலந்து கொள்வது இதன் மகுட சிறப்புக்கு மேலும் ஒரு மணி
கல் ஆகும் .
நாகதீப
புராண விகாரை, இது ஒரு புத்தர் ஆலயம். இதை யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு மணி நேர
பயணத்தில் சென்றடைய கூடிய தீவில் அமைத்துள்ளது. இந்த இடத்துக்கு புத்தர் ஞானம்
அடைந்த பிறகு வந்ததாக கூறப்படுகிறது .
யாழ்ப்பாணத்தில்
அழிந்த அரண்மனை ,யாழ்ப்பாணத்தில் வரலாற்று பொக்கிஷமாக பாதுகாக்கப்படும் வரலாற்றுப்
பிரியமுள்ள பயணிகளால் வெகுவாக ரசிக்கப்படுவது மன்னர்கள் கால அரண்மனை தான். தற்போது
இது நினைவு சின்னமாக பராமரிக்கப்படுகிறது .
இது தமிழர்கள் இன மன்னன் சங்கிலியன் வாழ்ந்த அரண்மனை ஆகும் .
சங்கிலியன்
சிலை , சங்கிலியன் யாழ் பேரரசன் கடைசி அரசன். தமிழ் தியாகியான அவருடைய பெயர்
இரண்டாம் சங்கிலி என்று அறியப்படுகின்றது. இந்த சிலை யாழ்நிலத்தின் அடையாளமாக
விளங்குகின்றது. இது கடந்த 1974 இல் திறக்கப்பட்டது.
யாழ்ப்பாண கோட்டை, இது போர்த்துக் கீசியர் ஆட்சி காலத்தில் இவர்களுடைய தலைமை மற்றும் தங்குமிடமாக பிளிப்டி ஒளிவோரா என்பவரின் மேற்பார்வையில் 1618ல் கட்டப்பட்டது தான் யாழ்கோட்டை. இன்று பிரதான சுற்றுலாத்தலமாக விளங்குகின்றது . கடற்கரைக்கு அருகில் அமைந்திருக்கின்றது அந்த பகுதியை கரையூர் என்ற தமிழ் பெயரில் அழைக்கப்படுகின்றது. தற்போது அழிந்த நிலையில் காணப்படும் கோட்டைக்குள் தேவாலயம் பல கன்னிமீரி சிலைகளும் அமைந்திருக்கின்றன.
நெடும்
தீவு , நெடும் தீவு தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும் .இங்கே
யாழ்ப்பாணத்துக்கு அருகிலேயே அமைத்துள்ளது. சுமார் 50 கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இந்த பகுதி சுற்றுலா பயணிகளை
மிகவும் கவர்ந்த இடமாகும் .
ஆணை இரவு ,ஆனை
இரவு ஆரம்ப காலத்தில் இருந்தே போர் வரலாற்றுக்கு பிரசித்தி பெற்ற இடமாகும் .ஆணை
இரவு ஆரம்ப காலத்தில் இருந்தே போர் வரலாற்றுக்கு பெயர் போனது .இந்த இடம் போர்த்தி கீசகர்கள் காலத்தில் ராணுவ
தளமாக விளக்கியுள்ளது. போர் சார்ந்த நினைவிடமாக இருப்பதனால் வரலாற்று
ஆய்வாளர்களும் சுற்றுலா பயணிகளும் ஆர்வமாக இங்கு வந்து செல்கின்றனர்.
ஆலமரய்யா கிணறு , நிலாவரி என்ற யாழ்ப்பாணத்தைச்
சேர்ந்த இடத்தில் ஒரு அதிசய கிணறு என்றும் உள்ளது. இது யாழ்ப்பாணத்தில் வரும்
சுற்றுலா பயணிகளால் ஆர்வமாக பார்த்த செல்லப்படுகின்றது. இந்த கிணற்றில் உள்ள
விசேஷம் என்னவென்றால் இதன் ஆழம் இதுவரை அளவிடப்படவில்லை.
யாழ்ப்பாணம் செல்லும் வழி .யாழ் விமான நிலையம்
இருப்பதினால் விமானம் வழியாக எந்த ஒரு பெரிய நகரத்திலிருந்தும் அங்கு செல்ல முடியும். கொழும்பிலிருந்து ஆறு மணி நேரம்
பேருந்து பயணத்திலும் யாழ்ப்பாணத்தை வந்தடைய முடியும் .
யாழ்பாணம்
எங்கே அமைந்துள்ளது ? யாழ்ப்பாணத்தில் என்ன எல்லாம் இருக்கிறது என்பதை இந்த சிறிய
தொகுப்பில் அறிந்து கொண்டிருப்பீர்கள் . இந்த கட்டுரையில் குறிப்பிடப்படாத மேலும்
எத்தனையோ விடயங்கள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ளது . இலங்கையின் கிரீடம் ஒரு
சுற்றுலா நகரம் யாழ்ப்பாணம் ஒரு முறை சென்று பாருங்கள் யாழ்ப்பாணத்தாரின்
கலாச்சாரத்தை நீங்கள் பழகலாம்
No comments:
Post a Comment