இலங்கையின் உலக அதிசயம் சிகிரியா


இந்து சமுத்திரத்தின் முத்து என அழைக்கப்படும் இலங்கைக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து சிகிரியா ஆகும் .இலங்கையின் இணையற்ற கலை பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கும் சிகிரியா மாத்தளை மாவட்டத்திற்கு கிழக்கு புறமாகவும் கொழும்பில் இருந்து
180 கிலோமீட்டர் தொலைவில் வடமத்திய மாகாணத்தில் உள்ள தம்புள்ளையில் சிகிரியா அமைந்துள்ளது . இந்த சிகிரியா குன்றின் உடைய உயரம் 370 மீட்டர் இதன் விசேட அம்சம் என்னவென்றால் இந்த குன்றில் இருந்து இலங்கையின் சகல காடுகளையும் பார்வையிட முடியும் .

 


சிகிரியா காசியப்ப மன்னனால் கி.பி  .477 தொடக்கம் 495 வரையான காலப்பகுதிகளில் அமைக்கப்பட்டதாகவும் இவ்வாறு காசியப்ப மன்னன் சிகிறியாவில் தன்னுடைய ஆட்சியை அமைக்க காரணமாக அமைந்த விடையங்கள் காசியப்ப மன்னன் தாதுசேன மன்னனுடைய இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகன் காசியப்பன் தாழ்ந்த குலத்தில் பிறந்ததால் அவரது பட்டத்து உரிமை சகோதரர் முகலனுக்கே சென்றடைய போகிறது என்பதை அறிந்த காசி அப்பன் , தானே பட்டத்து ராஜாவாக முடிசூட வேண்டுமென்பதால் தனது தந்தையை கொன்று அரச பீடம் ஏறினான் காசியப்பன் .


 

காசியப்பனிடமிருந்து  தென்னிந்தியாவிற்கு தப்பிச் சென்றான் முகலன் . தென்னிந்தியாவிற்கு தப்பிச் சென்ற முகலன் தன்னை தாக்கக்கூடும் என நினைத்த காசி அப்பன் எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள அனுராதபுரத்தில் இருந்த தனது இராசதானியை சிகிரியாவிற்கு மாற்றியதாக வரலாறுகள் கூறுகின்றது.


 

தந்தையை கொன்று ஆட்சி பீடம் ஏரிய  காசியப்பனுக்கு சமூகத்தினரும் பௌத்த மதத்தினர் முக்கியத்துவம் அளிக்கவில்லை . அவனை பாவியாக கருதி மகாவிகாரை பிக்குகள் அவனது கொடைகளை கூட நிராகரித்தனர் .சிகிரியா கோட்டையை சூழ பெரிய அகழி காணப்படுகின்றது. இந்த அகழி 16 அடி ஆழம் 88 அடி அகலமும் கொண்டதாக காணப்படுகின்றது .இந்த அகழியில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முதலைகள் பலவும் வளர்க்கப்பட்டன .


 

அகலியை அடுத்து சிகரத்துக்கு போகும் வழியில் வாட்டர் கார்டன் எனப்படும் நீர் தோட்டம் காணப்படுகின்றது.  இங்கு பல நீர்நிலைகள் ஒவ்வொரு ஆழங்களை கொண்டவையாக காணப்படுகின்றன .



இதில் சில நான்கடி ஆழம் கொண்டதாகவும் , சில தரை மட்டத்துடனும் காணப்படுகின்றது . ஆனால் இவற்றில் நீர் நிரம்பிக் காணப்படும் போது ஆழம் ஒரே அளவு உள்ளது போன்று தான் காணப்படும்.  தாக்க வரும் எதிரிகள் வெவ்வேறு காலங்களைக் கொண்ட நீர் நிலைகளை கடப்பதற்கு சிரமப்படும் வேளையில் அவர்களை இலகுவாக தாக்க முடியும் என்பதற்காக தான் இந்த நீர் தோட்டங்கள் அமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது .


 

சிகிரியா மலையில் அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் ஊடாக மலையின் மத்திய பகுதிக்கு செல்ல முடியும்.  இதிலிருந்து மலையின் வடக்குப் பக்க மேடைக்கு செல்ல மன்னாளான படிக்கட்டுகள் காணப்படுகின்றன. இது பெரிய சிங்கத்தின் கடைவாய் பகுதியினூடாக ஊடுருவி காணப்படுகின்றது மலையின் உச்சியில் அரண்மனையும் மிகப்பெரிய நீச்சல் குலமும் காணப்படுகின்றது. இந்தக் குளம் 90 அடி நீளமும் 68 அடி அகலமும் ஏழு அடி ஆழமும் கொண்டதாக காணப்படுகின்றது.


 

சிகிரியாவில்  மங்கையர் உருவங்கள் ஏறத்தாழ 500 வரையப்பட்டதாக சிகிரியா சுவர் கவிதைகளில் கூறினாலும் தற்போது ஏறத்தாழ 22 ஓவியங்ககளே மீதமாக உள்ளன.  



அதில் முழுமையாக அமைந்து ஓவியங்கள் ஒரு சில மட்டுமே .இவ் ஓவியங்கள் வரைவதற்கு வைக்கோல், உமி ,களிமண் , தாவரனார், வகைகள் தாவரப் பாசை சுண்ணாம்புவாகிய நம் பயன்படுத்தி சாந்துக்கலவை தயாரிக்கப்பட்டது . கரடு முரடான மேற்பரப்பை கொண்ட கற்பாறை மீது சாந்து பூசி அந்த சாந்து பூசி உளறுவதற்கு முன்பு ஓவியங்கள் வரையப்பட்ட தாக கூறப்படுகின்றது. இந்த நுட்ப முறையினை பிரஸ் கோ புவனோ எனவும் அழைப்பர் .இதனை எளிமையாக ஈரச்சுளை மரபு எனவும் அழைப்பர் .


 

சிகிரியா ஓவியங்களின் பிரதான துணைப்பொருளாக மங்கையர்களே காணப்பட்டனர். இவை உடலின் மேற்பகுதி மட்டும் தெரியும் உருவங்களாக வரையப்பட்டு காணப்படுகின்றன . இவ் உருவங்கள் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்ட தன்மையை கொண்டு காணப்படுகின்றன. இம்மங்கையர்களின் உருவங்கள் தனித்தனியாகவும் , சோடியாகவும் ஒழுங்கினைத்து வரையப்பட்டு காணப்படுகின்றது. பெண்களின் அறைக்கு கீழ்ப்பகுதி மேகக் கூட்டங்களால் மறைக்கப்பட்ட தன்மையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.  எல்லா உருவங்களும் சற்று சாய்வாக திரும்பி நிலையில் உள்ளவாறு தான் சித்தரிக்கப்பட்டுள்ளது.


 

 இங்கு வரையப்பட்ட மங்கையர் உருவங்கள் பூத்தட்டுக்கள், பூங்கொத்துக்கள் ஏந்திய மங்கையர்கலாகவே வரையப்பட்டுள்ளன . அலங்கார ஆடை அணிகலன்கள் அணியப்பட்டு இருக்கும் இவர்களின் கைகள் தலை என்பவற்றை அலங்கரிப்பதற்கு தாமரை ,அலறி ,அல்லி  போன்ற மலர்கள் பயன்படுத்தபட்டுள்ளன .மஞ்சள் கபில நிறம் சிவப்பு , பச்சை  ,கருப்பு வர்ணங்கள் உபயோகித்து முப்பரிமாண தன்மை வெளிப்படும் வகையில் இவ் ஒவியங்கள் வரையப்பட்டுள்ளன .


 இவ்வாறு இயற்கை எழில் கொஞ்சும் சிகிரியாவினை  1982 ஆம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் கலைக்கலாச்சார முக்கியத்துவம் மிக்க இடமாக அறிவித்தது.  சுற்றுலா பயணிகளே சுற்றிப் பார்க்க விரும்பு ஓரிடமாக சிகிரியா காணப்படுகின்றது . உயரத்தில் இருக்கும் சிகிரியா குன்று வரலாறு எமக்காக தந்த மிகப் பெரும் சான்று. 

No comments:

Post a Comment